பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/828

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உ.உள க0கள் ঢ়ে কে স্ট্র কেf" } இதன் தொகைச் சூத்திரத்துள் ஆறு தலையிட்ட வந்நாலைந்து மெனக் கூறுபடுத்தி வேறு நிறீஇப் பின்ன ரெட்டுறுப்பெனக்கூறிய தென்னையெனின் அவை யொரோ செய்யுட்கோதிய வுறுப்பென் பதுரஉம் இவை பல செய்யுளுந் திரண்ட வழி இவ்வெட்டுறுப்பும் பற்றித் தொகுக்கப்படு மென்பது உம் அறிவித்தற்கெனக் கொள்க. இவற்றை வனப்பென்று பெயர் கூறிற்றுப் பலவுறுப்புந் திரண்டவழிப் பெறுவதோ ரழகாதலின். இப்பெயர் சூத்திரத்தாற் பெறவேண்டுவார் 'வனப்பிய றானே வகுக்குங் காலைச் சின்மென் மொழியால்" எனப்பாடமோதுப.1 இது பெரும்பான்மை பல செய்யுளுறுப்பாய்த் திரண்டு பெருகிய தொடர்நிலைக்குப் பெறுவதோ ரழகென்பதும், சிறுபான்மை தனிச்செய்யுட்கும் இவ்வழகு கொள்ளவேண்டுமென்பதும், இருபத்தாறுறுப்பும் அங்ங்னந் திரண்டசெய்யுட்கு முரித்தென்பதும் உணர்த்துதற்குத் தொகைச் சூத்திரத்தைப் பிரித்தோதிப் பின்னும் ஓரினப்படுத்தி யொருகுத்திரமாகவே யோதினா ரென்றுணர்க. இவ் வனப்பை யொரோசெய்யுளுட்கொள்ளின் மாத்திரை முதலியவற்றின் அழகு பிறவாதாம். இங்ங்னம் வகுப்பவே தனிநிலைச் செய்யுளுந் தொடர்நிலைச்செய்யுளும் எனச் செய்யு ளிரண்டாயிற்று. இனிக் கூறுகின்றன தொடர்நிலைச்செய்யுளென் றுணர்க. இது முறையே அம்மை கூறுகின்றது. அம்மை குணப்பெயர். அமைதிபட்டு நிற்றலின் அம்மையாயிற்று. (இ-ள்). சின். யால் எ-து சின்மையாய் மெல்லியவாய சொல்லானும் தாய, பனுவலின் எது இடையிட்டு வந்த பனுவல் இலக்கணத்தானும், அடிநிமிர் வின்றுதான் அம்மை. எ.து அடிநிமிர்வின்றாய் வருவதுதான் அம்மை யெனப்படும் எ-று. அடிநிமிராதென்றது ஆறடியின் ஏறாமையை சிலவாதல் சொல்லெண்ணுச் சுருங்குதல். மெல்லியவாதல் சிலவாகிய சொற்களும் எழுத்தினான் அகன்று காட்டாது சிலவெழுத்தான் 1 , இங்ங்கனம் FLು கொண்டோர் இளம்பூரணரும் பேராசிரியரும். அம்மையாவது, சிலவாய் மெல்லியவாய சொற்களால் ஒள்ளியவாய பொருண்மேற் சில வடியாற் சொல்லப்படுவது' என்பர் யாப்பருங். கலவிருத்தியாசிரியர்.