பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/829

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ககேஅ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - ೬೧೮6:57 வருதல், தாயபனுவலின் என்பது அறம் பொரு ளின்ப மென்னு 'மூன்றற்கு மிலக்கணங் கூறுவன போன்றும் இடையிடையே அன்றாயுந் தாவிச் செல்வ தென்றவாறு. அங்ங்ணம் வநதது பதினெண்கீழ்க் கணக்கு. அதனுள் இரண்டடியானும் ஐந்தடி யானுஞ் சிறுபான்மை யாறடியானு மொரோசெய்யுள் வந்த, வாறும் அவை சின்மென்மொழியாய் வந்தவாறும் அறம்பொரு ளின்பத்திலக்கணங் கூறிய பாட்டுக்களும் பயின்று வந்தவாறும் இடையிடையே கர்நாற்பதுங் களவழி நாற்பது முதலியன வந்தவாறுங் காண்க. உள்ளுறுப்பாய்ப் பதினெட்டையும் வனப்பெனப் படுமென்றுங் கொள்க. “பொருள்கருவி காலம் வினையிடனோ டைந்து மிருடீர வெண்ணிச் செயல் (திருக்க எரு) இஃது இலக்கணங் கூறவிற் பனுவலினென்றார். "மலர்காணின் மையாத்தி நெஞ்சே யிவள்கண் பலர்காணும் பூவொக்கு மென்று” (திருக்கககஉ) இஃது இலக்கிய மாதலில் தாயவென்றார். தாவுதல் இடை யிடுதல், அத் னுள்ளுறுப்பாகிய பாட்டுக்கடோறும் மாத்திரை முதலிய வறுப்புக்க ளேற்பன பலவும் வருமாறும் இவ்வனப்பெட் -1 ஏற்பன பலவும் வருமாறு முணர்க. ஆசாரக்கோவையுள் "ஆரெயின் மூன்றும்' (தற்சிறப்புப்) ஆறடியாற் சிறுபான்மைவந்தது. ஆய்வுரை : செய்யுளுறுப்புக்கள் பலவுந் திரண்டவழிப் பெறுவதோர் அழகினை ஈண்டு வனப்பு என்றார். அஃது அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என எண் வகைப்படும். செய்யுட்கள் பலவும் திரண்டவழி அவற்றின்கண் அமைந்த சொற்பொருள் அழகினை முற்கூறிய எட்டுறுப்பும் பற்றி வகுத்துணர்த்துதல் மரபாதலின் இவை வனப்பெனப் 1.3.1... [...sos. மாத்திரை முதல் வண்ணம் ஈறாகச் சொல்லப்பட்டி இருபத்தாறும் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் இன்றியமையாத உறுப்புக்களாகும். அம்மை முதலாகிய எட்டும் செய்யுட்கள் கலவாகத் தொடர்ந்தமைந்த தொடர்நிலைச் செய்யுட்கே பெரும்பான்மையும் வருவன. சிறுபான்மை தனிச்செய்யுட்கும்