பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/834

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா உஉக கOஉங். "நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ" (சிலப்-ஊர்காண் 49) எனவும் வரும் சிலப்பதிகாரத் தொடர்களும், தொன்றுபட வரூஉம் தொன்மைத்து. அடிப்பட்டு வருகின்ற பழைமைத்து’ எனவும், நெடுமொழி பெருவார்த்தை. பழைதாகப் போதுகின்ற வார்த்தை யென்றுமாம்” எனவும் வரும் அரும்பதவுரையும் இங்கு ஒப்புநோக்கத்தக்கன. இனி, பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் உரையொடு புணர்ந்த" எனவரும் தொல்காப்பியத் தொடர்க்கு உரைநடையுடன் விரவிய’ எனப்பொருள் கொண்டு, பெருந்தேவனாராற் பாடப்பெற்ற பாரதமும் தகடூர் யாத்திரையும் போல அமைந்த உரையிடையிட்ட செய்யுட்களைத் தொன்மை’ என்னும் வனப்புக்கு உதாரணமாகக் குறித்துள்ளார்கள். எவ்வாறாயினும் நாட்டில் வழங்கும் பழைய (புராணக்) கதைகளையும் வரலாறுகளையும் பொருளாகக் கொண்டு பாடப் பெறும் தொடர்நிலைச் செய்யுள்கள் தொன்மை யென்னும் வனப்பமைந்த இலக்கியங்கள் எனக் கொள்ளுதலில் தொல்காப்பிய உரையாசிரியர் அனைவரும் ஒத்த கருத்தினர் என்பது இங்கு மனங்கொளத் தகுவதாகும். ஆய்வுரை : இது, தொன்மை யென்னும் வனப்பு உணர்த்துகின்றது (இ.ஸ்) உரையோடு புணர்ந்த பழமை பொருளாக வருவது தொன்மை என்னும் வனப்பாகும் எ-று. உரையொடு புணர்தலாவது, நெடுங்காலமாகப் பலராலும் சொல்லப்பட்டு வழங்கி வருதல், பழமை-பழங்கதை. பழமைத்" தாகிய பொருள்மேல் வருவன, இராம சரிதை, பாண்டவ சரிதை முதலாயனவற்றின் மேல் வருஞ் செய்யுள் என்பர் இளம்பூரணர். தொன்மை’ என்னும் இச்சொல்லை இப்பொருளில் இளங்கோவடிகளும் எடுத்தாண்டுள்ளார்.