பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/849

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கCங் அ தொல்காப்பியம் - பொருளதிகாரம் - உரைவளம் முதற்குறிப்புடைய ஆசிரியப்பாவினை இழைபு என்னும் வனப்புக்கு இலக்கியமாகக் காட்டினர் இளம்பூரணர். இச்சூத்திரத்திலுள்ள குறளடி முதலா ஐந்தடி ஒப்பித்து’ என்னுந்தொடர்க்கு இருசீரடி முதலாக ஏழுசீ ரடியளவும் வந்த அடி ஐந்தினையும் பெரும்பான்மையும் நாற்சீரடி படுக்கப்பட்டு’ எனப்பொருள் வரைந்து, 'அவையாவன கலியும் பரிபாடலும் போலும் இசைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன” எனவும், தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டும்’ என்றது, அவிநயத்திற்கு உரியவாதல் நோக்கி எனவும் இசைப் பாட்டாகிய இழைபு என்னும் வனப்பினை நாடகச்செய்யுளாகிய புலன் என்னும் வனப்பிற்கு முன்னர் வைத்தல் முறையாயினும் முத்தமிழுக்கும் இலக்கணங் கூறுங்கால் இயற்றமிழை அடுத்து இனிக் கூறுதற்குரியது இசைத்தமிழாதலின் இசைப் பாட்டாகிய இழைபின் இலக்கணம் இசைத்தமி ழிலக்கணத்தை யொட்டி இயற்றமிழ்ச் செய்யுளின் இறுதிக்கண் வைக்கப்பட்டது எனவும் பேராசிரியர் கூறும் விளக்கம் இங்குக் கூர்ந்து நோக்கத் தகுவ. தாகும். உங்டு செய்யுள் மருங்கின் மெய்பெற நாடி இழைத்த இலக்கணம் பிழைத்தன போல வருவன உள்வெனும் வந்தவற் றியலால் திரியின்றி! முடித்தல் தள்ளியோர் கடனே. இளம் பூரணம் : என்.எனின். யாப்பிற்கோர் புறனடை உணர்த்துதல் துதலிற்று, இது சூத்திரத்தாற் பொருள் விளங்கும். (உகடு) இஃது, இவ்வோத்திற்கெல்லாம் புறனடை கூறுகின்றது. (இ.ள்) செய்யுளிடத்துப் பொருள்பெற ஆராய்ந்து தந்திரம் செய்யப்பட்ட இலக்கணத்தின் வழிஇயின போன்று பின் தோன்றுவன வுளவேல் முற்கூறப்பட்ட இலக்கணத்தோடு திரியாமல் முடித்துக் கோடல் அறிவுடையோரது கடன் (எ-று). 1. வருவ வுளவெனினும் என்பது பேராசிரியர் கொண்டபாடம். வருப வுள. வேனும் என்பது நச்சினார்க்கினியருரையிலுள்ள பாடம். "மெய்பெறநாடிபொருள் பெற ஆராய்ந்து . வருவ-இனித்தோன்றுவன, 2. திரிவின்றி எனவும் பாடம்.