பக்கம்:தொல்காப்பியம்-செய்யுளியல்-உரைவளம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செய்யுளியல் - நூற்பா கூ தி'இ. நச்சினார்க்கினியம் டி இது முற்கூறியவற்றிற்கும் இனி வருஞ் சீர்க்குமெல்லாம் புறநடை. (இஸ்) அசை...... சேர்த்தி எ-து அசைகளையும் சீர்களையும் ஒசையோடு சேர்த்தி, வகுத் ... ... ராறே எ-து வேறுபாடுணர்வித்தலும் செய்யுளிலக்கணத் துறைபோயினாரது நெறி எறு. முற்கூறிய மாத்திரையென்னு முறுப்பின் ஒசையை யளந்து இன்னோசையும், இன்னாவோசையும் அறிந்து உணர்த்துக ள்-று உ-ம். “தருக்கிப் புணர்ந்து தணந்த தமது பொருப்புப் புடைத்துப் புடைத்து’ என்றால் வெண்பாவீற்றடி இன்னோசைத்தாகாமையிற் பொருப்புத் தழைந்த பொழிந்து என மெல்லினவோசை சேர்க்க இன்னோசைத்தாயிற்று. நிலமிசை நீடுவாழ் வார்’ (திருக்குறள்-3) இதனுள் வாழ்வாரென்னும் ஒசையை வகுத்து வார் என நேரசைக் சீராக்க அசையான் இன்னோசைத் தாயிற்று. இதனை வகையுளி என வேறோருறுப்பாக்குவாருமுளர், இனிக் கட்டளையடியையும் சீர்வகையடியையும் இசையொடுசேர்த்தி இன்னோசையுணர்க. அஃது அளவுஞ் சிந்தும் வெள்ளைக் குரிய (செய்-ருஅ) என்ற பதினான்கெழுத்தளவும் வருங் கட்டளை வெண்பாவும் வெண்சீரேயொன்றிற் கலித்தளைதட்டு இன்னோசை பெறாதாம். மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் மாசேர்வாய் என்றாற் றுள்ளலோசையும் பிறக்கும். இதனை மாசேர்வாய் பாதிரி காருருமு காருருமு எனின் இன்னோசைத்தாய்ச்செப்பலோசை பிறந்தது. இனிச் சீர்வகையடிக்கும் யாதானு நாடாமா லூராமால் யாதோதான்’ என்றாற் சீர்வகைத் துள்ளலோசையும், 'என்னொருவன்’ என்றாற் சீர்வகைச் செப்பலோசையும் பிறக்குமாறு இசையொடு சேர்த்தியுணர்க. இனி ஞாயிறு புலிவருவாய் புலிவருவாய் மாசேர்வாய் என்றால் ஞாயிறு என்ற இயற்சீர்ப்பின் நிரையொன்றி ஆசிரியத்தளையா யிற்றேனும் கலித்தளைப்பாற்படுதலும் ஞாயிறு புவிசேர்வாய் புலிசேர்வாய் மாசேர்வாய் என்ற வழிப் புவிசேர்வாய் மாசேர்வா யென நேரொன்றிற்றேனும் கலித்தளைப்பாற்படுதலும் இசை யொடு சேர்த்தியுணர்க. இவ்வாறே பிறவும் வகுத்துணர்த்துதல் அத் துறைபோயினார்க்கே தெரிவதாம்.