பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் ஆய்வுரை இவ்வியல் எக-முதல் அடு-வரையுள்ள சூத்திரங்கள் பதினைந்தும் உயர்தினை நான்கு சாதியும் பற்றிய மரபு உணர்த்துவனவாக அமைந்துள்ளன . அவற்றுள் இச்சூத்திரம் அந்தணர்க்குரியன கூறுகின்றது. {5ा ॐ ? (இ-ன்) நூல், கரகம், முக்கோல், மனை என்பன ஆராயுங் காலத்து அந்தணர் க்கு உரியனவாகும் எ-று. பற்றிய தமிழிலக்கியச் சான்றுகள் கிடைக்கவில்லை. எனவே இப்பகுப்பு பேராசிரியர் காலத்தில் வழங்கிய வடமொழி மிருதி நூல் பற்றியதென எண்ண வேண் யுளது. மக்களை நில வகையாற் பகுத்துரைப்பதன்றி நிறவகையாகிய வருணத்தாற் பகுத்துரைக்கும் நெறியினை ஆசிரியர் தொல் காப்பியனார் மக்களுக்குரிய ஒழுகலாறுகளை விரித்துரைக்கும் முன்னைய இயல்களில் யாண்டும் குறிப்பிடவேயில்லை. இளமை, ஆண்மை, பெண்மை முதலியன காரணமாகத் தம் காலத்திற் பயின்று வழங்கிய மரபுப் பெயர்களைத் தொகுத் துணர்த்தும் முறையிலேயே ஆசிரியர் இம்மரபியலை அமைத் துள்ளார். இதன்கண் 1 முதல் 70-வரையுள்ள சூத்திரங்களும், 85-முதல் 90-வரையுள்ள சூத்திரங்களும் இம்மரபினையே தொடர்ந்து விரித்துரைப்பனவாக அமைந்துள்ளன. இயல் பாக அமைந்த இத்தொடர்பு இடையறவுபட்டுச் சிதையும் நிலையில் உயர்திணை நான்கு சாதிகளையும் பற்றிய பதினைந்து சூத்திரங்கள் இவ்வியலில் 71-முதல் 85-வரை புள்ள எண்ணுடையனவாக இதன்கண் இடையே புகுத்தப் பட்டுள்ளன. 1. முன், அகத்திணை யொழுகலாற்றுக்குரிய தலைமக்களை வகைப்படுத்துக் கூறிய நிலையிலும், புறத்தினையொழுக லாற்றில் வாகைத்திணைப் பகுதிகளை விரித்துரைத்த நிலை யிலும் மக்களை அவர்கள் வாழும் நிலத்தாலும் அவரவர்கள் மேற்கொண்ட தொழில் வகையாலும் பகுத்துரைத்ததன்றி, அவர்களை வேளாண்மாந்தரென்றோ வைசியரென்றோ இவ் வாறு வருணம் பற்றித் தொல்காப்பியர் யாண்டும் குறிப்பிட வேயில்லை. மரபியலில் இடம் பெற்றுள்ள வைசியன் என்ற சொல், சங்கச் செய்யுட்களில் யாண்டும் வழங்கப்படாத பிற்காலச் சொல்லாகும். வருணம் நான்கு என்ற தொகை