பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i Öğ தொல்காப்பியம் பட்டஞ்சாத்தியவாதல் நோக்கிக் கூறப்பட்டன. அஃதேல், தேர் கூறியதென்னையெனின். - அதுவும் அவைபோல அரசர்க்கேயுரிய தென்றுளதென்றற்கும், அது பூண்ட குதிரையும் அவர் க்கே யுரிய வென்றுள வென்றற்குங் கூறினானென்பது, இக்கருத்தினாற் போலும் நடைநவில் புரவியெனச் சிறப்பித்து அதனை முற்கூறிய தென்பது. எல்லாவற்றினுஞ் சிறந்ததா தலான் முடி பிற் கூறப்பட்டது தெரிவுகொள் செங்கோல் அரசரென்பதனான் அரசரெல்லாம் தந் காட்டு நன்றுந் தீதும் ஆராய்ந்து அதற்குத் தக்க தண்டஞ் செய்தற்கு உரிமையும் அதுவெனக் கொள்க. ஆய்வுரை : இஃது அரசர்க்குரியன கூறுகின்றது. (இ-ஸ்) சேனையும் கொடியும் வெண்கொற்றக் குடையும் முரசும் நடைபழகிய குதிரையும் யானையும் தேரும் தாரும் முடியும் ஆகிய ஒன்பதும். (அரசியலாட்சிக்குப்) பொருந்துவன பிறவும், நாட்டில் நிகழும் நல்லனவற்றையும் தீயனவற்றையும் ஆராய்ந்து முறைசெய்யும் ஆற்றலைக் கொண்ட செங்கோன் முறைமையை யுடைய அரசர்க்குரியனவாகும் எ-று. 'பிறவும் என்றதனால், ஆரமும் கழலும் எல்லாம் அர சர்க்கு உரிய என்றார் இளம்பூரணர். பிறவும் என்றதனால் கவரியும் (வெண்சாமரையும்) அரியணையும் அரண் முதலாயினவுங் கொள்க, என்றார் பேராசிரியர். செங்கோலைத் தனித்து எண் ணாமல் தெரிவுகொள் செங்கோலரசர் என அரசர்க்கு அடை மொழியாக உடம்பொடு புணர்த்தோதினமையால் மேற்குறித்த அங்கங்கள் எல்லாவற்றினுந் தலைமை வாய்ந்தது முறை செய்த லாகிய செங்கோன்மையென்பது வலியுறுத்தப்பட்டது. தார் எனவே கண்ணியும் அடங்கிற்று. த டர் என்றது பனம் பூ, வேப்பம் பூ, ஆத்திப் பூ என அவ்வேந்தர் குடிக்குரிய அடை யாள மாலையினை. கண்ணி என்றது, போர்த்தொழில் குறித்து முடிமேல் அணிதற்குரிய வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை முதலிய போர்ப்பூக்களொடுமிடைந்த முடி மாலையினை. இவை அனைத்தும் அரசர்க்கேயுரியன எனத் தேற்றேகாரம் வருவித்துரைக்க, (бта.