பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#26 தொல்காப்பியம் "ஆம்பலிலை, தாமரையிலை' எனவும், "ஆம்பற்பூ, தாமரைப்பூ" எனவும் வரும், பிறவும் அன்ன கொள்க. இன்னும் இவ்விலேசானே புல்லிற்குரியன மரத்திற்கு வருவனவுங் கொள்க ; அவை, 'ஈன்றவ டிதலைபோ லீர்பெய்யுந் தளிரொடும்’ (கலி : 32) என ஈர்க்கென்பது மாவிலைமேல் வந்தது . பிறவும் அன்ன. ஆய்வுரை : இஃது, அகத்தேவயிரமுடைய தாவரவுறுப்புக்களின் மரபுப் பெயர்களைத் தொகுத்துக் கூறுகின்றது. (இ~ள்) இலை, தளிர், முறி, தோடு, சினை, குழை, பூ, அருப்பு, நனை முதலாகச் சொல்லப்பட்டனவும் அவைபோல் வனபிறவும் மரவகையைச் சார்ந்துள்ள உறுப்புக்களைக் குறிக்கும் மரபுப் பெயர்களாகும் எ-று. புறத்தேவயிரமும் அகத்தேவயிரமும் இல்லாத தாவரங்களுள் முருக்கு, தனக்கு, முதலிய ஒரு சாரன இவ்வுறுப்புப் பெயரு டையன மரம் எனப் பெயர் கூறப்படுவன. புல்லினுள் ஒரு சாரன மரத்திற்குச் சொல்லப்பட்ட இலை, பூ முதலிய உறுப்பின் பெயர்களைப் பெறுவனவும், புல்லிற்குச் சொல்லப்பட்ட ஈர்க்கு முதலிய உறுப்பின் பெயர்கள் சில மரத்திற்கு உரியனவாய் வரு வனவும் வழக்குநோக்கி உணர்ந்து கொள்ளத்தக்கனவாம். (அகூ) க. காயே பழமே தோலே செதிளே வீழே டென்றாங் கலையும் அன்ன. இளம்பூரணம் : (இ-ள்) இச்சூத்திரம் அவ்விருவகைக்கும் பிற்கூறவிற்காய் முதலாகச் சொல்லப்பட்ட அவ்வுறுப்புப்பெயர் அவ்விரு வகைக்கும் பொதுவெனப்படு2 மென்றவாறு. 1. புல்லிற்குரிய ஈர்க்கு’ என்னும் உறுப்பு ஈன்றவன்தி தலைபோல் ஈர்பெய்யுந்தளிரொடும்’ (கலி-32) என மாவிலைமேல் வந்தது. 2. புல், மரம் ஆகிய இரு வகைக்கும் பொதுவாகிய உறுப்பு களின் மரபுப்பெயர்களை உணர்த்துகின்றது.