பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿欲 தொல்காப்பியம் (இ-ள்) குற்றமில்லாத சூத்திரஞ்சொன்ன இயல்பினான் மறைவின்றி விளக்குவது காண்டிகையாமென்றவாறு. பேராசிரியம் : இது, முறையானே காண்டிகையாமாறுணர்த்துதல் துத லிற்று: (இ-ள்) குற்றமில்லாத சூத்திரந் தனதுட்பட்ட இலக் கணத்துள் ஒன்றுங் காவாது முடியச்செய்வது காண்டிகையாம், (எ-று). பழிப்பில் சூத்திர மென்றதனாற் காண்டிகை செய்யத்தகா தென்று இகழ்ச்சிப்படப் பரந்தன. உளவாயின் மறுத்துச்செய்க வென்பதாம். இதனை வருகின்ற காண்டிகைக்கும் அகலவுரைக் கும் ஏற்பித்துக் கொள்க. உதாரணம் எழுத்தென்று சிறப்பித்துச் சொல்லப் படுவன அகரமுத னகரவிறுவாய் முப்பஃது என்று சொல்லு வார் ஆசிரியர், சார்ந்து வரவிலக்கணத்த மூன்று மல்லாத இடத்து (தொல். எழுத்து. சூ க) எனவரும், பிறவும் அன்ன. இனி மறுத்துச் செய்யுங்கால், 'வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட் டயர்ந்த காந்தளும்' (தொல்-புறத் : 5) என்பது தெய்வச்சிறப்பினை அறியுஞ் சிறப்போடு வெவ்வா யுடைய வேலனது வெறியாட்டினை ஆடிய காந்தளுமென்றாற் போல வருவன பலவுங் கொள்க. இங்ங்னங் கூறிய உதாரணங் காட்டல் வேண்டாமையை உணர்ந்து உரைநடந்த காலமும் உடையவாகும் முற்காலத்து நூல்களென்பது கருத்து. அஃதேல், உதாரண த்தோடு வருங் காண்டிகையிலவோவெனின்,அது வருகின்ற சூத்திரத்துட் சொல்லுதும், கரப்பில்லதென்னாது? 1. கரப்பில்லது என்னாது, கரப்பின்றி முடிவது” எனக் கூறிய அதனால் பரந்துபட்ட சூத்திரத்தினைத் தொடர்தோறும் கண்ணழிவு செய்து பிரித்துப் பொருள் வரையாமல், 'வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டயர்ந்த காந்தளும்' என்பது முதலாக இக்கூறப்பட்ட இருபத்தொரு துறையும் கரந்தையெனப்படும்’ என்றாற்போலத் தோற்று வாய் செய்து விடுதல்’ எனக் காண்டிகையான் உரைக்குங்கால் உட்பொருளெல்லாம் விளங்காமற் கரந்து செய்தலும் உண் டென்று கொள்ளப்படும்.