பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 23 i என்று கூறவே முற்கூறிய பொருளினை வற்புறுத்தலாம் அது வென்பது. இங்ங்னந் திரிபுபடுதல் அறிந்தே கூறுதலானும் எதிர் பொருளாகலானும் இஃதறியாது உடம்படுதலினடங்காதாயிற்று. பொய்யும் வழுவுந் தோன்றிய பின்ன ரையர் யாத்தனர் கரணம் ” (தொல்-கற் : 4) (29) சொல்லி னெச்சஞ் சொல்லியாங் குணர்த்தல் சொல்லினாற்றலாற் பெறப்படும் பொருளினையும் எடுத்தோதி யாங்குக் கொள்ளவைத்தல் : அஃது, ' எஞ்சிய வெல்லா மெஞ்சுத லிவ (தொல்-எழுத்-மொழி : 44) என்புழி, எல்லா மென்பதனை எச்சப்படுத்தற்காகாதன இருபத் தாறு கொண்ட வழியும் அதனை எடுத்தோதிற் சிறப்பின்றென்று கொள்ளற்க என்பது இதன் கருத்து. எச்சவியலுட் கூறிய பொருள் அகத்தோத்துக் கூறிய பொருளோடு ஒப்புக் கூறுதலும் அதன் பாற்படும். மொழிந்த பொருளோடொன்ற வவ்வயின் மொழியாத தனை முட்டின்று முடித்தலொடு இதனிடை வேற்றுமை யென்னையெனின், அஃது எடுத்தோதப்பட்ட பொருட்கண்ண தெனவும், இஃது எடுத்தோத்தினோடு ஒப்ப எச்சப்பட வைத்துக் கொள்ளும் இலக்கணம் எனவும் அதனோ டி.தனிடை வேற்றுமை யுணர்க. (30) தந்து புணர்ந்துரைத்தல்-உள்பொருளல்லதனை உளபோலத் தந்து கூட உணர்த்தல்; அவை அளபெடை யசைநிலை யாகலு முரித்தே' (தொல்-செய் : 17) எனவும், ' மெய்யுயிர் நீங்கிற் றன்னுரு வாகும்’ (தொல்-எழுத்-புண : 37) எனவும் மேற்கூறிய புள்ளியினையே ஒருபயனோக்கி மீட்டும் புள்ளி பெறுமெனக் கூறுதல் அதற்கு இனமெனப்படும், ' குறுமையு நெடுமையு மளவிற் கோடலிற் றொடர்மொழி யெல்லா நெட்டைழுத் தியல' (தொல் எழுத்-மொழி : 17) என்பதே பற்றி,