பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் ,4莎 (இ-ன்) : புறத்தே வயிரமுடைய புல்லும் உள்ளே வயிர முடைய மரமும் என்னும் இருவகைத் தாவரங்களும் உடம்பினால் உற்றறிதலாகிய ஒரறிவுடைய உயிர்களாகும் எ-று. காழ்-வயிரம்; திண்மை. அக்கிளைப்பிறப்பு பிறவும் உளஅவ்வினப்பிறப்பு பிறவும் உள்ளன. கிளைப்பிறப்பு' என்ற தொடரைக் கிளையும் பிறப்பும் என உம்மைத்தொகையாக விரித்துரைப்பர் பேராசிரியர். கிளை-இனம். இங்குக் கிளை என்றன புறவயிரமும் உள் வயிரமும் இன்றி ஒரறிவுயிர்க்கு இனமாகக் கூறப்படும் புதல், கொடி முதலிய தாவரங்களை பிறப்பு என்றன. மக்களாகவோ அன்றி விலங்கு பறவை முதலியனவாகவோ பிறப் பினால் வேறுபடினும் ஒரறிவின் நிலையினதாகிய குழந்தைப் பருவத்து உயிர்களும், எக்காலத்தும் ஒரறிவாகவுள்ள ஏனைய உயிர்களும் ஆகும். ‘புல்மர முதலவுற்றறியுமோ ரறிவுயிர் (நன்னூல் சூ.-445). என்றார் பவணந்திமுனிவரும். இனி, பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' என்பதற்கு, புல்லும் மரமும் என இங்குச் சொல்லப்பட்ட ஒரறிவுயிர்க்குப் பிற அறிவும் உள எனப் பொருள் கொள்வர் நச்சினார்க்கினியர். கலித்தொகை சச-ஆம் பாடலில்வரும் கரிபொய்த்தான் கீழிருந்த மரம் போலக் கவின் வாடி' என்ற தொடரின் உரையில், புல் லும் மரனும் ஒரறிவினவே, பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே' (மரபியல் : 28) இதனுட் பிற அறிவும் உள என்று கூறினார்; அதனாற் பாவத்திற்கு அஞ்சி மரம் கவின் வாடிற்று என்றார்' என நச்சினார்க்கினியர் இச்சூத்திரத்திற்கு எழுதிய புதிய உரை விளக்கம் இலக்கியம் உள்வழி அதற்குரிய இலக்கண அமைதி யினை நுண்ணிதின் உணர்ந்து எடுத்துக் காட்டும் அவர்தம் புலமைத் திறத்தினைப் புலப்படுத்தல் காணலாம். இதனுள் பிறவும் உள' என்ற தொடர்க்குப் பிற அறிவும் உள' என்று கொண்டார் நச்சினார்க்கினியர். இங்கு ஒரறிவுடைய் உயிர்களாகக் கூறப்பட்ட தாவரங்களுள் பிற அறிவுடையனவும் உள்ளன என்பது அவர் கருத்தெனக் கொள்ள வேண்டியுள்ளது. இந்நுட்பம், கரிபொய்த்தான் கீழிருந்த மரம்போலக் கவின் வாடி’ (கலி-நச) என்னுங் கலித்தொகைத் தொடர்ப் பொருளை விளக்கும் நிலையில்,