பக்கம்:தொல்காப்பியம்-மரபியல்-உரைவளம்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மரபியல் 登$ பகுவாய் வராஅற் பல்வரி யிரும்போத்து’’ (அகம் : 36) எனவும், - வாளை வெண்போத் துணி இய’’ (அகம் : 276) எனவும், நீர் வாழ்சாதியுட் சில வரும்,

  • மயிற்போத் தூர்ந்த வயிற்படை நெடுவேள்” எனவும்,

போத்தொடு வழங்கா மயிலு மெழாலும்' எனவும் வந்தவாறு. 'பயில’ என்றதனால், நாரை நிரையோத் தயிாை யாரும்’ (குறுந் : 166) எனவும், ஒழிந்தனவும் இவ்வாறே கண்டு கொள்க. மற்து முதலை யும் இடங்கருங் கராமுந் தம்மின் வேறெனப்படுமோவெனின், ' கராஅங் கலித்த குண்டுகண் ணகழி யிடங்கருங் குட்டத் துடன்றொக் கோடி யாமங் கொள்பவர் சுடர்நிழற் கதுரஉங் கடுமுரண் முதலைய நெடுநீ ரிலஞ்சி' (புறம் : 37) எனவே றெனக் கூறப்பட்டனவென்பது. இனிச், செம்போத்தென்பதும் ஈண்டுக் கொள்ளாமோ வெனின், அது பெண்பாற்கும் பெயராகலின் ஒரு பெயரே, பண்புகொள் பெயரன்2 றென்பதுணர்க. ஆய்வுரை : (இ-ள்) பெற்றம், எருமை, புலி, மரை, புல்வாய் என் னும் இவ் ஐந்து இனமும் போத்து’ என்னும் ஆண்மைபற்றிய மரபுப் பெயர் பெறும் எ-று. (சE) 1. கராம், இடங்கர், முதலை என்பன தம்முள் வேறு என்பது இங்கு எடுத்துக் காட்டிய புறநானூறு 37-ம் பாடலாற் புலனாதலறிக. 2. செம்போத்து, என்பது ஒரு பெயர். அது ஆண்பாற்கும் பெண்பாற்கும் பொதுவாய்ப் பறவையினத்தைக் குறிப்பது; எருமை போத்து, முதலைப் போத்து, மயிற்போத்து என் றாற் போன்று ஆண்பாற்குரிய மரபுப் பெயரொடு ஒட்டிய பண்பு கொள் பெயரன்று.