பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா கூச 菇、

என்பதனுள், ஆழ்கடல் வண்ணனையுங் கொன்றைத்தாரோனையும் உவமை கூறியவற்றை' மறுத்துத் தேர்வளவனெனத் தெளிந்தே னெனப் பொருளையே நாடுதலின் அஃது, உவமம் வேறுபட வந்ததாயிற்று.

இந்திர னென்னி னிரண்டேகண் னேறுசர்ந்த வந்தரத்தா னென்னிற் பிறையில்லை-யந்தரத்துக் கோழியா னென்னின் முகமொன்றே கோதையை ஆழியா னென்றுணரற் பாற்று' ( முத்தொள்ளாயிரம்)

என்பதனுள் இந்திரனையும், இறையோனையும், முருகனையும், ஒப்பு மறுத்து நெடியோனை உவமங்கூறலின் ஒப்புமை மறுத்துப் பிறிது நாட்டியது.

  • சுற்றுவிற் காமனுஞ் சோழர் பெருமகனாங்

கொற்றப்போர்க் கிள்ளியுங் கேழொவ்வார்-பொற்றொடீஇ யாழி யுடையான் மகன்மாயன் சேயனே கோழி யுடையான் மகன்’ (தண்டி - பா - 52)

என்பதனால், உவமையும் பொருளும் முன் ஒருங்குகிறீஇப்பின்னர் ஒவ்வாமை கூறுதலின் இதுவும் பின்னும் வேறுபடவந்ததாயிற்று.

புனனாடர் கோமானும் பூந்துழாய் மாலும் வினைவகையான் வேறு படுவ-புனனாட னேற்றெறிந்து மாற்றலர்பா லெய்தியபார் மாயவன் ஏற்றிரந்து கொண்டமையா னின்று' ( தண்டி-பா-53)

என்பதும் அது.

"ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்

நீர்த்துறை படியும் பெருங்களிறு போல இனியை பெரும எமக்கே’’ (புறம். 94)

என்னும் பாட்டினுள் உவமையாகிய பொருளினை யானையுங் கடாமுமென இரண்டாக்கி யானைக்கே ஊர்க்குறுமாக்கள்

1. உவமை கூறி அவற்றை (அவ்வுவமைகளை) எனப்பிரித்துப் பொருளுணர்க.