பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ : தொல்காப்பியம்-பொருளதிகாரம்

உவமைக்கும் பொருட்கும் ஒப்புமை மாறுபடக் கூறுதலு ம் , ஒப்புமை கூறாது பெயர் முதலியன கூறுமளவில் மறுத்துக் கூறுதலும், ஒப்புமை மறுத்துப் பொருளை நாட்டிக்கூறுதலும், ஒப்புமை மறுத்த வழிப் பிறிதோர் உவமைதாட்டுதலும், உவமையும் பொருளும் முத் கூறிநிறுத்திப் பின்னர் மற்றைய ஒவ்வாவென்றலும், உவமைக்கு இருகுனங்கொடுத்து வறிதே கூறுமிடத்து உவமையினை இரண்டாக்கி ஒன்றற்குக் கூறிய அடைமொழி மற்றொன்றற்குக் கூறாது விடுதலும், ஒப்புமை குறைவுபட உவமித்து மற்றொரு குணங்கொடுத்து நிரப்பு தலும், ஒவ்வாக்கருத்தினால் ஒப்புமை கொள்ளுதலும், உவமத்திற். கன்றி உவமத்திற்கேதுவாகியபொருள்களுக்குச் சில அடைமொழிகூறி அவ்வடைமொழியானே உவமிக்கப்படும் பொருளினைச் சிறப்பித் தலும், உவமானத்தினை உவமேயமாக்கியும் அது விலக்கியும் கூறு தலும், இரண்டுபொருளாலே வேறு வேறு கூறிய வழி ஒன்று ஒன்றற்கு உவமையென்பது கொள்ளவைத்தலும் ஆகிய இவை போல்வன வெல்லாம் வேறுபடவந்த உவமப் பகுதிகள் எனவும் இவை யெல்லாம் வினை பயன் மெய் உரு என்னும் நான்கும் பற்றி ஏனை யுவமத்தின் பாலும், உவமையும் பொருளுமாகி வேறு வேறு விளங்க வாராது குறிப்பினாற் கொள்ளவருதல்பற்றி உள்ளுறையுவ மத்தின் பாலும் அடங்கப் பொருந்தவைத்து உணரப்படும் எனவும் இவற்றுக்கு எடுத்துக்காட்டுத்தந்து விளக்குவர் பேராசிரியர். பேராசிரியர் கூறும் இவ்விளக்கமும் எடுத்துக்காட்டுக்களும் தொல்காப்பிய உவமவியலுடன் பிற்காலத்துத்தோன்றிய அணியியலை ஒப்பிட்டு ஆராய்தற்குரிய நெறியினைப் புலப்படுத்தும் முறையில் அமைந்துள்ளமை உணர்ந்து மகிழத்தகுவதாகும்.

க.கி. ஒரீஇக் கூ றலும் மரீஇய பண்பே.

இளம் பூர ைம்

என்-எனின். இதுவு மூவமைக் குரியதோர் மரபு உணர்த்துதல்

நுதலிற்று.

(இ-ன்.) உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறலும் மருவிய இயல்பு என்றவாறு .

- இன் அளமை இவ்வுவமேயப் பொருட்குச் சிறிதும் ஒவ்வாது என விலக்கிக்க ஆதல்,