பக்கம்:தொல்காப்பியம் உவமையியல் உரைவளம்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உவமையியல்-நூற்பா ந.சு ఛ్ : శ్రీ

பொருளாக்கியும் உவம நிலத்திற்கேற்ற வெண்ணெய்த்திரளொடு கழன்ற பூவினை உவமஞ்செய்தும் அந்நிலத்தியல்பு கூறினமையின் அது பயனிலைபுரிந்த வழக்கெனப்பட்டது. பிறவும் அன்ன.

"உவமைத்தன்மையும் என்ற உம்மையான் உவமத்தன்மையே யன்றி வாளாது தன்மை கூறுதலும் அந்நிலத்திற்கே பயனிலை யெனப்படுவனவுங் கொள்க: அவை,

மான்றோற் பள்ளி மகவொடு முடங்கி யீன்பின வொழியப் போகி நோன்கா ழிரும்புதலை யாத்த திருந்துகணை விழுக்கோ லுளிவாய்ச் சுரையின் மிளிர மிண்டி யிருநிலக் கரம்பைப் படுநீ றாடி நுண்புல் லடக்கிய வெண்ப லெயிற்றியர் பார்வை யாத்த பறைதாள் விளவி ரீைழன் முன்றி னிலவுரற் பெய்து குறுங்கர ழுலக்கை யோச்சி’ (பெரும்பாண். 89-97)

என்றவழி உவமஞ்செய்யாது அந்நிலத்தியல்பு கூறப்பட்டதாயினும் உவமத்தாற் பொருட்பெற்றி தோன்றச் செய்தாற்போல அந்நிலத்திற்குப் பயப்பாடு வெளிப்படச் செய்யாமையின் உவம விலக்கணத்துள் இதனையும் இலேசினாற் கொண்டாமென்பது. அற்றன்று,

"மரபே தானும்’ (தொல்-செய்,80)

என்புழி நாற்சொல்லியலெனச் சொற்றன்மையுங் கூறப்பட்டமையின் உவமையாராய்ச்சியுள் அது கூறானென்பது. உம்மை இறந்தது. தழி இயிற்று; என்னை ? உயர்ந்ததன் மேற்றன்றி உயர்பிழிபுடைத் தல்லாத தன்மையுவமையுங் கொள்க வென்றமையின். (ங்க)

ஆய்வுரை

இதுவும் உவமைக்குரியதோர் மரபுணர்த்துகின்றது.

(இ - ள்) உவமிக்கப்படும் பொருளோடு உவமை தோன்ற

வருதலேயன்றி உவமையது தன்மை கூறுதலும் உவமையாதற்கு உரித்து பயனிலை பொருந்திய வழக்கின்கண் எ-று.

"பாரிபாரி' எனவரும் புறப்பாடலில் மாரிபோலும் பாரியது கொடை,என உவமம் வாய்பாட்டாற் கூறாது பாரியொருவனுமல்லன்,