பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ శ్ర தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இளம்பூரணம்: என் . எனின், கற்பின்கண் தோழிகூற்று திகழும் இடம் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

(இ - ள்.}. பெறற்கரும் சிறப்பு முதலாக மரபுடை யெதிரும் உளப்படப் பிறவும் ஈறாக மொழியப்பட்டவை யாவும் தோழிக் குரிய என்று கூறுவர் புலவர் என்றவாறு.

பெறற்கரும் பெரும்பொருண் முடிந்தபின் வந்த தெறற் கரு மரபிற் சிறப்பின்கண்ணும் என்பது-பெறுதற்கு அரிய பெரும்பொருளை முடித்த பின்னர்த் தோன்றிய தெறு தற்கரிய மரபு காரணத்தால் தலைவனைச் சிறப்பித்துக் கூறுமிடத்தும் தோழிகூற்று நிகழும் என்றவாறு.

பெரும்பொருள்-ஈண்டு வரைவிற்கேற்றது. தெறுதல்-அழல நோக்குதல். -

'அயிரை...... பெரிய நோன்றணிர் நோகோ யானே'

(குறுந் கனஅ)

என வரும்.

அற்றமழிவு உரைப்பினும் என்பது-முற்காலத்துற்ற வருத் தத்தின் நீங்கினமை கூறினும் என்றவாறு.

'எரிமருள்.........மலரணிந் தோயே" (ஐங்குறு. 294) எனவரும்.

அற்றம் இல்லாக் கிழவோ ற் சுட்டிய தெய்வக்கடத்தினும்’ என்பது-குற்றமில்லாத தலைமகனைச் சுட்டிய தெய்வக்கடன் கொடுத்தற்கண்ணும் என்றவாறு.

1. தலைமகட்குச் சுற்றத்தார் வேண்டிய பரிசப்பொருளை அவர்கள் விரும்பிய வண்ணமே கொடுத்து வரைந்து கொள்ளுதற்கு ஏற்ற மிகுபொருள் என்பார்; 'பெறற்கரும் பெரும் பொருள் என்றார்.

2. மக்களது வாழ்க்கை வளம்பெறும் வண்ணம் சோர்வின்றிச் செய்தற் குரியது தெய்வ வழிபாடு என்பது புலப்பட அற்றமில்லாத் தெய்வக்கடம் எனவும், அதுதானும் களவொழுக்கத்தில் வக்தொழுகிய தலைமகனது கலங் குறித்துத் தோழியால் கேர்ந்து கொள்ளப்பட்டமையின் கிழவேற்சட்டிய தெய்வக்கடம் எனவும் விரித்துரைக்கப்பட்டது.