பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'இ.கா தொல்காப்பியம் - பொருளதிகாரம்

,ே புல்லுதல் மயக்கும் புலவிக் கண்ணும்

இல்லோர் செய்வினை இகழ்ச்சிக் கண்ணும் பல்வேறு புதல்வர்க் கண்டுநனி உவப்பினும் மறையின் வந்த மனையோள் செய்வினை பொறையின்று பெருகிய பருவரற் கண்ணும் காதற் சோர்விற் கடப்பாட் டாண்மையின் தாய்போற் கழறித் தழிஇய மனைவியைக் காய்வின் றவன்வயிற் பொருத்தற் கண்ணும் இன்னகைப் புதல்வனைத் தழிஇ இழையணிந்து பின்னை வந்த வாயிற் கண்ணும் மனையோ ளொத்தலின் தன்னோர் அன்னோர் மிகையெனக் குறித்த கொள்கைக் கண்ணும் எண்ணிய பண்ணையென் றிவற்றொடு பிறவும்

கண்ணிய காமக் கிழத்தியர் மேன.

என்-எனின், காமக்கிழத்தியர் கூற்று நிகழும் இடம் உணர்த்திற்று.

இளம் பூரணம்: புல்லுதன் மயக்கும் புலவி முதலாகச் சொல் லப்பட்ட இடத்தினும் அந்நிகரண பிறவிடத்தினும் குறிக்கப் பட்ட கூற்றுக் காமக்கிழத்தியர் மேல ைஎன்றவாறு.

கூற்றென்பது அதிகாரத்தான் வந்தது.

காமக்கிழத்தியராவார் பின்முறை ஆக்கிய கிழத்தியர். அவர் மூவகைப்படுவர்; ஒத்த கிழத்தியரும் இழிந்த கிழத்தியரும் வரையப் பட்டாரும் என ஒத்த கிழத்தியர் - முந்துற்ற மனையாளன்றிக் காமம் பொருளாகப் பின்னுந் தன் குலத்துள்ளாள் ஒருத்தியை வரைதல், இழிந்தாராவார்-அந்தணர்க்கு அரசகுலத்தினும் வணிககுலத்தினும் வேளாண் குலத்தினும் கொடுக்கப்பட்டா ரும், அர சர்க்கு ஏனையிரண்டுகுலத்தினுங் கொடுக்கப்பட்டாரும்,

பா. வே. 1. தாய்போல் தழீஇக் கழறியம் மனைவியைக்,

2, பின்னர்

3. மிகைபடக்.