பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாசுஉ தொல்காப்பியம் - பொருளதிகாரம்

அவரின்-அலர் மொழியில்ை: இன்னுருபு ஏதுப்பொருளில் வந்தது. அலரின் காமத்து மிகுதி தோன்றும் என இயைத்துப் பொருள் கொள்க.

உக. கிழவோன் விளையாட் டாங்கும் அற்றே.

இளம்பூரணம் : இதுவும் அது (இ ஸ்.) கிழவோன் விளையாட்டும் காமத்தின் மிகுதி யைக் காட்டும் என்றவாறு :

ஆங்கு-அசை.

'அகலநீ துறத்தலின் அழுதோவா உண் கனெம்

புதல்வனை மெய் தீண்டப் பொருந்துதல் இயைபவால் நினக்கொத்த நல்லாரை நெடுநகர்த் தந்து நின் தமர்பாடுந் துணங்கையுள் அரவம் வந் தெடுப்பு.ே

(g εθ5. ετο) எனவரும்.

விளையாட்டாற் காமமிக்கு உறங்காமை கண்டுகொள்க. (உ-) நச்சினார்க்கினியம் : இதுவுங் காமச்சிறப்பே கூறுகின்றது. (இ - ள்.) கிழவோன் விளையாட்டு ’-தலைவன் பரத்தை யர் சேரியுள் ஆடலும் பாடலும் கண்டுங் கேட்டும் அவருடன் யாறு முதலியன ஆடியும் இன்பம் நுகரும் விளையாட்டின் கண்ணும், ஆங்கும் அற்று :-அப் பரத்தையரிடத்தும் அலரால் தோன்றுங் காமச் சிறப்பு (எ று.)

"ஆங்கும்’ என்ற உம்மையான் ஈங்கும்" அற்றெனக் கொள்க. தம்மொடு தலைவன் ஆடியது பலரறியாத வழி யென்று மாம. பல ரறிந்தவழி அவனது பிரிவு தமக்கு இழிவெனப்படுதலின் அவர் காமச்சிறப்புடையராம். தலைவன் அவரொடு விளையாடி அலர் கேட்குந்தோறுந் தலைவிக்குப் புலத்தலும் ஊடலும் பிறந்து

1. தலைவனது விளையாட்டும் அவ்வலர் போன்று தலைமகள் உள்ளத்தே காமவுணர்வினை மிகுதிப்படுத்தும்.

2, கிழவோன் விளையாட்டு: என்றது, பரத்தையர் சேரியுள் ஆடலும் பாடலுங் கண்டுங் கேட்டுங் காமநுகரும் தலைவனது விளையாட்டினை.

8. ஆங்கும் . அப்பரத்தையரிடத்தும்.

4. அற்று . அத்தன்மைத்து: என்றது, அலரால் காமத்து மிகுதி தோன்றும் அத்தன்மையது என்பதாம்,

5. சங்கும் . மனைக்கண்வாழும் தலைமகளிடத்தும்.