பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

南&淳 தொல்காப்பியம் - பொருளதிகாரம்

ஏதுவின் உரைத்தலும் துணியக் காட்டலும்: அணிநிலை உரைத்தலும் கூத்தர் மேன. இளம் பூரணம் :- என் எனின், கூத்தர்க்குரிய திறங் கூறுதல் துதலிற்று.

(இ-ன் தொல் லனை யுரைத்த லாவது-முன்புள்ளார் இவ்வாறு செய்வரெனக் கூறுதல்.

நுகர்ச்சி பேத்த லாவது-நுகர்ச்சி யிவ்வாறு இனிய தொன்றெனப் புகழ்தல்

பல்லாற்றானும் ஊடலிற் றகைத்தலும் என்பது-பலநெறி பானும் ஊடலினின்றுந் தலைமகளை மீட்டல்: அஃதாவது இவ்வாறு செய்தல் குற்றமென்றானும் அன்புடையார் செய்யாரென் றானும்: மனைக்கிழத்தியர் செயலன்று என்றானும் இவ்வாறு கூறு கல்.

உறுதிகாட்ட லாவது-இவ்வூடல் தணிந்ததனாற் பயனிது வெனவும் நன்மை பயக்கும் எனவும் கூறுதல்.

அறிவு மெய்ந்நிறுத்தலாவது-தலைமகள் மெய்யின் கண் மிக்க துணிவினாற் கெட்டவறிவை இது தக்கதன்றென அறிவு கொளுத்துதல்.

ஏதுவினுரைத்தலும் என்பது-இவ்வாறு செய்யின் இவ் வாறு குற்றம் பயக்கும் என ஏதுவினாற் கூறுதல், அது பிறள் ஒருத்தி கெட்டபடி கூறுதல்.

துணியக்காட்ட லாவது- அவள் துணியுமாறு காரணங் காட்டுதல்.

அணிநிலை யுரைத் தலாவது-இவ்வாறு உளதாகிய அணி யைப் புலரவிடுகின்றதனாற் பயன் என்னை யெனக் கூறுதல்.

. இவை யெல்லாம் கூத்தர் மேலன என்றவாறு அவர் எல்லா நெறியினானும் புனைந் துரைக்க வல்ல ராதலிான் அவர் மேலன என உரைத்தார். இவற்றிற்குச் செய்யுள் வந்தவழிக் கண்டுகொள்க. இந்நூல் வழக்குஞ் செய்யுளும் பற்றி நிகழ்தலின் இப்பொருண்மேல் வரும் வழக்குரை உதாரணமாம்? (உளர்

ാജ്ഞം

2 துணிவு காட்டலும். பா. வே. $ துனியிகுற், என்றிருத்தல் வேண்டும்.

1. என்றாயினும்” எனற்பாலன ‘என்றாலும் எனக்குறைந்து கின்றன

2. "இந்நூல் வழக்குஞ் செய்யுளும் பற்றிவருதலின் இப்பொருள் மேல் வரும் அழககுரையும் உதாரணமாம்' என உம்மையொடுகட்டிப் பொருள் கொள்க.