பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் - பொருளதிகாரம் قي

இளம்பூரணம் : இது மேலதற்கொர் புறனடை.

(இ. ள்) கொடுப்போரின்றியும், கரண நிகழ்ச்சி உண்டு : புணர்ந்துடன் போகிய காலத்து என்றவாறு. .

எனவே கற்பிற்குக் கரண நிகழ்ச்சி ஒருதலையாயிற்று. இதனானே கொடுப்போ சில்வழியும் கரண நிகழ்ச்சி யுண்மையும் ஒழுக்கக் குறைபாடு இன்மையும் கொள்க.

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள் பு தொன்மூ தாலத்துப் பொதியில் தோன்றிய நாலூர்க் கோசர் நன்மொழி போல வாலா கின்றே தோழி யாய்கழற் சேயிலை வென்வேல் விடலையொடு தொகுவளை முன்கை மடந்தை நட்பே. (குறுந் கரு)

இதனுள் விடலையொடு மடந்தைநட்பு பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொண்டு நாலூர்க் கோசர் நன்மொழி போல வாயாயிற்று எனச் செவிலி நற்றாய்க்குக் கூறினமையானும், விடலை எனப் பாலை நிலத்திற்குரிய தலைவன் பெயர் கூறின மையானும் கொடுப்போரின்றியும் கர ண ம் நிகழ்ந்தவாறு

凸荔了莎侬高。

நச்சினார்க்கினியம் : இஃது எய்தியதன்மேற் சிறப்பு விதி.

(இ. ள்.). கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டேமுற்கூறிய கொடைக்குரிய மரபினோர் கொடுப்பக் கோடலின்றி புங் கரணம் உண்டாகும்; புணர்ந்து உடன் போகிய காலையானபுணர்ந்து உடன் போகிய காலத்திடத்து (எ.று).

இது புணர்ந்து உடன்போயினார் ஆண்டுக் கொடுப்போ fiன்றியும் வேள்வி யாசான் காட்டிய சடங்கின் வழியாற் கற்புப் பூண்டு வருவதும் ஆமென்றவாறு. இனி ஆண்டு வரையாது மீண்டுவந்து கொடுப்பக் கோடல் உளதேல் அது மேற்கூறிய

1. கொடுப்போர் என்றது. மகட்கொடைக்கு உரிமையுடைய தாய் தந்தை கிய இருமுதுகுரவர், தாயுடன் பிறந்த மாமன்மார், தலைவியின் தமையன்மார் த யத்தாராகிய பங்காளிகள் ஆகிய தலைவியின் சுற்றத்தார்ை. களவொழுக்கத்தில் தலைவி கற்றத்தார் அறியாது தன் ஆருயிர்த் தலைவனோடு உடன்போயின காலத்து அவ்விருவரும் சென்று தங்கிய ஊரின்கண்வாழும் சான்றோர்களே காதலர்