பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்பியல்-நூற்பா ங்க ೪೯st

உம்மை எதிர்மறையாகலான் மீளாமையும் உரித்தாயிற்று: என்னை; இளமைப்பருவங் கழியாத காலத்து அக்காதன் மீளாதாகலின். பெரும்பொருளென்றார், வேதநூல், அந்தணர்க் குப் பின் முறை வதுவை மூன்றும் அரசர்க்கிரண்டும் வணிகர்க் கொன்றும் நிகழ்தல் வேண்டுமெனக் கூறிற்றென்பது உணர்த்து தற்கு ” -

- இனி, மகப்பேறு காரணத்தாற் செய்யும் வதுவையென்று மாம். ஆக்கிய வென்றதனானே வேளாளர்க்கும் பின் முறை வதுவை கொள்க. தொன்மனைவி யென்னாது முறை யென்ற தனானே அவரும் பெருஞ்சிறப்புச்செய்து ஒரு கோத்திரத்தராய் ஒன்றுபட்டொழுகுவரென்பது கூறினார். இங்ங்னந் தொன்முறை யார் பின் முறையாரை மகிழ்ச்சிசெய்தமை கண்டு இத் தன்மை, யாரை இறந்தொழுகித் தவறுசெய்தேமே யென்றும் பின்முறை யார் அவர் புதல்வரைக் கண்டு மகிழ்ச்சி செய்து வாயில் தேர்ந்த குணம்பற்றி இவரை இறந்தொழுகித் தவறுசெய்தேமேயென்றும் பரத்தைமை நீங்குவனென்றார். புகினு மெனவே பிறர்மனைப்

1. கலங்கலும’ என புழ உம்மை எதிர்மறையாதலால், இளமைப்பருவம க்ழியச்தகாலத்து அக்காதல் குறையாமையின் பரத்தையரை விட்டு மீளாமையும் அவனுக்குரியதாயிற்று எனக் கருத்துரைப்பர் கச்சினார்க்கினியர்.

3. 'பின் முறையாக்கிய பெரும் பொருள்வதுவை' என்ற தொடரில் உள்ள “பெரும் பொருள்' என்பதற்கு வேதநூல் எனப்பொருள் கொண்டு, அக்தணர்க்கு மூன்றும், அரசர்க்கு இரண்டும், வணிகர் க்கு ஒன்றும் ஆகப் பின்முறைவதுவை கிகழம் என 3ు త్రమే கூறிற்று என்னும் விளக்கம், தொல்காப்பியர் காலத்தில் இல்லாத கால்வகை புகுத்துதலால், பண்டைத்தமிழ்ப் பொருளிலக்கண மரபுக்குச் சிறிதும் (ஒல்வாததாகும்.

,ே இனி, இத்தொடரிலுள்ள பெரும்பொருள் என்பதற்கு 'பெருமை பமைந்த மகவு எனப்பொருள் கொண்டு, "இனி, மகப்பேறு காரணத்தால் செய்யும்வதுவை யென்றுமாம்' என கச்சினார்க்கினியர் கூறும் இரண்டால்து ப்ொருளே தொல்கிப்பியனார் கருத்துக்கு ஏற்புடையதெனத் தெளிதல் வேண்டும். இனம் பெற்ற மகவினைப் பொருள் என வழங்கும் இம்மரபினைத் தம் பொருள் என்பு, தம்மக்கள் (திருக்குறள்-68) எனத் திருவள்ளுவர் தம் முன்னேர். வழங்கும் மரபாக எடுத்தாண் டுள்ளமையும் இங்கு ஒப்புநோக்கி புணரத் தகுவி தாகும்.