பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

溶.瑋蛭。 தொல்காப்பியம் - பொருளதிகார ம்

மாற்றாளைத் தன்னின் இழிந்தாளாகக் கருதாது தன்னோடு ஒப்ப உயர்ந்தாளாகக் கொண்டொழுகுதல் தனது உயர்ச்சியாம்; செல்வன் பணிமொழி இயல்பு ஆகலான தலைவன் இவ்வா றொழுகுகவென்று தமக்குப் பணித்த மொழி நூலிலக்கணத்தான் ஆன மொழியாகலான் (எ று).

ஈண்டு மகன்றா யென்றது பின்முறையாக்கிய வதுவை யாளை. இன்னும் அவன் சோர்பு காத்தல் தனக்குக் கடனென்று கூறப்படுதலாலே முன்முறையாக்கிய வதுவையாளைத் தம்மின் உயர்ந்தாளென்றும் வழிபாடாற்றுதலும் பின் முறை வதுவை: யாளுக்கு உயர்பாஞ் செல்வன் பணித்த மொழியாலென்றவாறு. ஈண்டு மகன்றா யென்றது உயர்ந்தாளை, உய்த்துக்கொண்டுணர்த சிலன்னு முத்தியால் இவை பிரண்டும் பொருள். செல்வ' னென்றார், பன்மக்களையுந் தன்னாணை வழியிலே இருத்துந் திரு வுடைமைபற்றி. இவை வந்த செய்யுட்கள் உய்த்துணர்க {ங்க.)

ஆய்வுரை : இது, மேற்கூறியதன் கண் எழுவதோர் ஐயம் அகற்றுதல் நுதலிற்று.

(இ-ள்) தலைவனது வாழ்க்கையிர் சோர்வு பிறவாமர் காத்தல் வாழ்க்கைத்துணைவியாகிய தலைவியின் கடமையென நூல்களிற் கூறப்படுதலால் தாய் போன்று தலைவனை இடித் துரைக்கும் உயர்வினை மகனைப்பெற்ற தலைவி பெற்றிருத்தலும் தலைவனது உயர்ச்சியாகவே கருதப்பெறும் : எல்லாச் ச்ெல்வங்: களுக்கும் உரிமையுடையனாகிய தலைவன், தன்பால் அன்புடை

-l-ബ***ങ്ങബ

1. மகன்தாய்' என்றது, கனுக்குத் தாயா கிய பின் முறையாக்கிய ைேனவியையும், மகன்தாய் உயர்பு என்றதனால், மூத்த மனைவியையும் குறிக் கும் என உய்த்துக் கொண்டுணர்தல் என்னும் உத்தியாற் கொள்வர் கச்சினார்க்கினியர்.

உய்த்துக் கொண்டுணர்தலாவது, ஒன்றற்கு இலக்கணம் கூறியவழி அதனை உய்த்துணர்ந்து கொண்டமைபோலவே அதனையொத்த மற்றொன்றற்கும் அவ் விலக்கணத்தினை உய்த்துணர்ந்து கொள்ளுதல். 'மகன் தாய் எனப் பின் முறையாக்கிய மனைவிக்குரிய உயர்பினை ஏற்றுக்கொள்ளுதல் தலைவிக்குரிய உயர்மனதலோடு பின்முறையாக்கிய மனைவியும் முன் முறைமணந்த தலைவிக்கு உரிய உயர்பினை ஏற்றுக்கொள்ளுதல் உயர்பாகும் என உய்த்துக்கொண் இணர்ந்தவாறு காண்க.