பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/232

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- L தொல்காப்பியம்-பொருளதிகாரம்

என்றது, இவர் அத்துறவிற்கு இடையூறாகாது முன் செல் வர், தாமும் அவரைப் பிரிவாற்றாமையி னென்பதாம். இதனைக் கற்புங் காமமும் 'தொல். கற், ! ) என்னுஞ் சூத்திரத்து முன்னாக வாயில்களைத் தொகுத்துக் கூறிய சூத்திரமாக வைத்தல் பொருத்த முடைத்தேனும் யாத்த சிறப்பினென்று துறவு நோக்குதலின் இதன் பின் வைத்தார். இதற்குக் கோப்பெருஞ்சோழன் துறந்துழிப் பிசி சாந்தையாரும் பொத்தியாரும் போல்வார் துறந்தாரென்று கூறும் புறச்செய்யுட்கள் உதாரணம் (எ - று.) (இஉ)

ஆய்வுரை : இது, கற்பின்கண் வாயில்களாவார் இவ ரெனத் தொகுத்துக் கூறுகின்றது.

( இ-ள்) தோழி, தாய், பார்ப்பான், பாங்கன், பாணன், பாடினி, இளையர், விருந்தினர், கூத தர், விறலியர், அறிவர், கண்டோர் ஆகிய இப்பன்னிரு வரும் தலைவன் தலைவியாகிய இருவரும் நிகழ்த்தும் மனை யறத்தின் கண் அன்பினாற்பிணிக்கப் பெற்ற சிறப்பினையுடைய வாயில்கள் என்பர் ஆசிரியர் எ-று.

வாயில் என்னும் சொல் காதலர் இருவரும் ஒருவர் கருத் தினை மற்றவர்க்கு விளங்க எடுத்துரைக்கும வழியாய்நின்று மனை வாழ்க்கை செம்மையுற நடத்துதற்கு உதவிபுரிவோர் என னும் கருததில் இங்கு ஆளப்பெற்றது.

இக. வினை.வயிற் பிரிந்தோன் மீண்டுவரு காலை

இடைச்சுர மருங்கில் தவிர்தல் இல்லை உள்ளம் போல உற்றுழி உதவும் புள்ளியற் கலிமா உடைமையான.

3. தவிர்தல் - தங்குதல் 2. தலை மக்கள் ஊர்க் து கடத்தும் ஊர்திகளின் விசை வுக்கு அவர்தம் உள்ளத்தின் விரைவினையே உவமையாகச் சொல்லுதல் மரபு. இம்மரபுக்கு.

'உள்ளம்போல உற்றுழியுதவும் புள்ளியற்கலிமா ” శrజ : శ్రీ' தொல் கசப்பியத்தொடர் இலக்கியமாக அமைந்துள்ள ை டிம் இதன் கண் குதிரையின் உற்றுழியுதவுக்தன்மைக்கு உள்ளத்தினையும் விரைவு கடைக்குப் அதனையின் பறத்த்ற்றொழிலினையும் உவமையாகச் சொல்லப் பெற்றுள்ள ல்ை ஆம் காணலாம். இத்தொல்காப்பியத் தொடரை அடியொற்றிய்தே,

'மானு:ருவாககின் மனம் பூட்டினையோ' என வரும் சங்கச் செய்யுளாகும்.