பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண் தொல்காப்பியம் - பொருளதிகாரம்

(இ-ள்.) பொய்யும் வழுவுந் தோன்றிய பின்னர் - ஆதி ஊழி கழிந்த முறையே அக்காலத்தந்தந் தொடங்கி இரண்டாம் ஊழி முதலாகப் பொய்யும் வழுவுஞ் சிறந்து தோன்றிய பிற் காலத்தே; ஐயர் யாத்தனர் கரணம் என்ப இருடிகள் மேலோர் கரணமும் கீழோர் கரணமும் வேறுபடக் கட்டினாரென்று கூறுவர். (எ று).

ஈண்டு என்ப" (249) என்றது முதனூலாசிரியரையன்று, வட நூலோரைக் கருதியது. பொய்யாவது செய்த ஒன்றனைச் செய்திலேனென்றல்; வழுவாவது சொல்லுதலே அன்றி ஒழுக்கத்து இழுக்கி ஒழுகல். அஃது அரசரும் வாணிகருந் தத்தம் வகையாற் செய்யத் தகுவன செய்யாது சடங்கொப்புமை கருதித் தாமும் அந்தணரோடு தலைமை செய்தொழுகுதலுங் களவொழுக்கத்தின் இழுக்குதல் போல்வனவும் அவர்க்கிழுக்கம். ஏனை வேளாளரும் இயற்கைப் புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்ப் பொய்யும் வழுவுந் தோன்றி வழுவுதல் அவர்க்கிழுக்கம். இவற்றைக் கண்டு இருடிகள் :

எடுத்துரைத்தார் என்பது ஏற்பட்டுக் காலமயக்கம் இடமயக்கம் பொருள்மயக்கம்

ஆகியவற்றுக்கு இடம்தந்து வழு.ப்படுதல் காண்க.

1. ஐயர்' என்னுஞ்சொல், தலைமைச் சிறப்புடைய பெரியோர்களைக் குறித்து வழங்கும் தனித்தமிழ்ச் சொல்லாகும். இதற்கு முனைவர் என இளம் பூரணரும் இருடிகள்' என கச்சினார்க்கினியரும் பொருள் வரைந்தனர். ஐயர் என்னும் இசசொல் இங்குத் தமிழின முதல்வராகிய முன்னோரைக் குறித்து வழங் கப்பெற்றதாகும். ஐயர் என்னும் இத்தமிழ்ச்சொல்லினை 'ஆர்ய என்னும் வட சொல்லின் திரிபாகக் கொண்டு இக்காலத்து ஆராய்ச்சியாளரொருவர் இத்தொல் காப்பிய நூற்பாவுக்கு மாறுபடப் பொருள் கடறியதும் உண்டு. என் ஐ முன் கில்லன் மின் தெவ்விர், பலர் என்ஐ முன் கின்று கல்கின்றவர்’ (திருக்குறள்-771) எனவும், 'என் ஐ புற்கை உண்டும் பெருக்தோளன்’ (புறநா-84) எனவும் வரும் தொடர் களில் என்-ஐ’ என்பது என்னுடைய தலைவன்’ என்ற பொருளில் வழங்குவதனை அறிஞர் பலரும் நன்குனர்வர். இத்தகைய 'ஐ' என்பதன் அடியாக அர்விகுதி பெற்ற பலர்பாற் பெயர் ஐயர்' என்னுங் தமிழ்ச்சொல்லாகும். ஐ வியப்பாகும்’ (உரியியல்-88) என்பது தொல்காப்பியம். மக்களைத் தீநெறியினின்றும் விலக்கி கன்னெறியிற் செலுத்தவல்ல பேரறிவும் பேராற்றலும் கல்லொழுக்கமும் உடைமை பால் யாவரும் வியந்து பாராட்டுங் தலைமைச் சிறப்புடைய சான்றோர்களை

ஏ , ப் போற்றும் மரபுண்மை இதனாற்புலனாம்.

'புதல்வற் பயந்த புனிறு தீர் பொழுதின்

கெய்யணி மயக்கம் புரிந்தோள் நோக்கி ஐயர் பாங்கினும் அமரர் ச் சுட்டியுஞ்

செய்பெருஞ்சிறப்போ டு சேர்தற் கண்ணும்' (கற்பியல்-5)