பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-Fడడా - தொல்காப்பியம்-பொருளதிகாரம்

பகநெய் கூர்ந்த மென்மை யாக்கைச் சீர்கெழு மடந்தை ஈரிமை பொருந்த நள்ளென் கங்குல் கள்வன் போல அகன்றுறை ஆரனும் வந்தனன் சிறந்தோன் பெயரன் பிறந்த மாறே. (நற்றிணை, 40)

இது, முன் வருங்காலத்து வாராது, சிறந்தோன் பெயரன் பிறத்தலான் வந்தானெனத் தோழி கூறினான்

குவளை மேய்ந்த குறுந்தான் எருமை குடநிதை தீம்பால் படு உ மூர புதல்வனை ஈன்றிவ னெய்யா டினனே.

இதுவும் அது.

பயங்கெழு துணையனை புல்லிய புல்லாது உயங்குள்ை கிடந்த கிழத்தியைக் குறுகிப் புல்கு என முன்னிய நிறையழி போழுதின் மெல்லென் சீறடி புல்லிய இரவினும் தலைவி தனது ஆற்றாமை மிகுதியால் தழுவி ஆற்று தற்குக் குளிர்ந்த பயன் கொடுத்தல் பொருந்திய பல அணைகளைத் தழுவித் தன்னைப் புல்லுதல் பெறாதே வருந்திக் கிடந்த தலைவியை அணுகித் தான் கூடுதலைக் கருதின நிறையழிந்த காலத்தே அவளது மெத்தென்ற சிறிய அடியைத் தீண்டிய இரத்தற்கண்ணும்:

இதனானே மகப்பெறுதற்கு முன்னர் அத்துணை பாற் றாமை எய்திற்றில ளென்றார். இப் பிரிவு காரணத்தால் தலை வனும் நிறையழிவனென்றார்,

'அசன்றுறை யணிபேற' என்னும் மருதக்கலியுள்,

என்னை நீ செய்யினும் உணர்ந்தீவார் இல்வழி முன்னடிப் பணிந்தெம்மை உணர்த்திய வருதிமன் நிரை தொடி நல்லவர் துணங்கையுட் டலைக்கொள்ளக் கரையிடைக் கிழிந்தநின் காழகம்வந் துரையாக்கால்.

(கலி. 73)

என இதனுட் சீறடிப் புல்லிய, இரவினைத் தலைவி கூறிய வாறு காண்க. தலைவன் கூற்று வந்துழிக் காண்க.