பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ੋਂ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

என வருவன தலைவி கூற்றாதலின் தலைவன் மீண்டு வருங்காற் பாகற்கே கூறுவனென்றார்."

காமக்கிழத்தி மனையோள் என்று இவர் ஏமுறு கிளவி சொல்லிய எதிரும்: காமக்கிழத்தி மனையோளென்றிவர் சொல்லிய ஏமுறு கிளவி எதிரும்-இற்பரத்தை தலைவியென்று கூறிய இருவர் சொல்லிய வருத்தமுற்ற கிளவியின் எதிரிடத் தும்; கூற்று நிகழ்த்தும்."

அவை "அருஞ்சுரத்து வருத்தம் உற்றீரே எனவும், "எம்மை மறந்தீரே" எனவுங் கூறுவனவும் பிறவுமாம்.

'எரிகவர்ந் துண்ட என்றுழ் நீளிடை

அரிய ஆயினும் எளிய அன்றே அவவுறு நெஞ்சங் கவவு நனி விரும்பிக் கடுமான் றிண்டேர் கடைஇ - நெடுமா னோக்கிநின் உள்ளியாம் வரவே.'

(ஐங்குறு. 368)

இது வருத்தம் உற்றீரே என்பதற்குக் கூறியது.

தொடங்குவினை தவிரா.................. உடம்பாண் டொழிந்தமை யல்லதை மடங்கெழு நெஞ்ச நின்னுழை யதுவே" (அகம், 29)

இது மறந்தீர்போலும் என்றதற்குக் கூறியது.

1. களிற்றின் மேலும், தகை கன்மா மேலும் ஊர்ந்து வருவோன் தலைவனே யாதலின், அவன் பொருட்டு ஊர்தியைச் செலுத்தும் பேரிசையூர்திப்பாகனாவான் தேர்ப்பாகனே எனவும் தலைவன் வினைமுற்றி மீண்டுவருங்கால் தேர்ப்பா கற்கே

கூறுவன் எனவும் கொள்க என்பதாம்.

2. சொல்லிய கிளவி, ஏமுறுகிளவி எனத்தனித்தனி இயையும், முைறு கிளவி பிரிவாற்றாமை விருத்தத்தைப் புலப்படுத் துஞ்சொல். எதிர்-எதிர்மாற்றம்; மறு மொழி, -