பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எசல் தொல்காப்பியம் - பொருளதிகாரம்

மாதர்மெல் நோக்கின் மகளிரை நுந்தைபோல் நோய்கூர நோக்காய் விடல்’’ (கலித். அசு )

என வரும்.

கொடியோர் கொடுமை கடும் என ஒடியாது நல்லிசை நயந்தோர் சொல்லொடு தொகை இப் பகுதியின் நீங்கிய தகுதிக் கண்ணும் என்பது-கொடியாரது கொடுமை சுடா நின்றதெனப் புணர்ச்சியை ஒடியாது புகழை விரும்பினோர் சொல்லோடே ஒருப் பட்டு வேறுபடுதலின் நீங்கிய தகுதிக்கண்ணும் என்றவாறு.

அஃதாவது, அக்காலத்துத் தக்கதறிதல் புகழை விரும்பி னோர் சொல்லும் சொல்லாவது, காமம் விரும்பும் பரத்தையரைப் போலாது அறத்தை விரும்புதல்.

யாசிவனெங் கூந்தல்' என்னும் மருதக்கலியுள்,

"மாண மறந்துள்ளா நாணிலிக் கிப்போர்

புறஞ்சாய்ந்து காண்டைப்பாய் நெஞ்சே உறழ்ந்திவனைப் பொய்ப்ப விடே எ மென நெருங்கில் தப்பினேன். என்றடி சேர்தலு முண்டு" (கலித். அக.) என்பது ஆற்றாமை வாயிலாகப் பகுதியி னிங்கிய தகுதி.

1. கொடியோர் என்றது, பரத்தமையொழுக்கமாகிய கோடுமையை மேற். கொண்ட தலைவரை. சுடும்-சுடா கின்றது; செய்யுமென்னும் வாய்பாட்டு நிகழ்' காலத்தெரிநிலைவினைமுற்று. ஒடிதல்-தளர்தல்; சோர்வடைதல்,

கல்லிசை நயங்தோர் சொல்-கல்லபுகழை விரும்பீய சான்றோர் கூறும் அறிவுரை. அவ்வறிவுரையோடு ஒருப்படுதலாவது பிறர் க்குத் தீங்கிலா கன்னெறிக் கண் ஒழுகுதல்,

பகுதியின் நீங்குதலாவது, தலைவி தன் கணவனாகிய தலைவன்ன்ேறு தான் வேறு எனப் பகுத்துக்காணும் வேறுபாட்டுணர்வின் நீங்கி, அவனுடைய குற்றங்குறை களைப் பொருட்படுத்தாமல் அவனொடு ஒன்றுபட்டொழுகுதல். இங்ங்ணம் 666 aறத்திற்குத் தகுவதறிந்து ஒழுகுதலே தலைமகளுக்குரிய தகுதியாம் என கற்புறுத்துவார் பகுதியினிங்கிய தகுதிக்கண்ணும்' என்றார்,