பக்கம்:தொல்காப்பியம் கற்பியல் உரைவளம்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

છાિ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இதனுள் ஒருத்தியை வரைந்து கூறாது நல்லோரைப் பொது வாகக் கூறியவாறும் வேண்டின மெனப் புலம்புகாட்டிக் கலுழ்ந்த தென ஈரங்கூறியவாறுங் காண்க.

தங்கிய ஒழுக்கத்துக் கிழவனை வணங்கி எங்கையர்க்கு உரை யென இரத்தற்கண்ணும் - பரத்தையர் மாட்டுத் தங்கிய செவ்வியை மறையாத ஒழுக்கத்தோடே வந்த தலைவனை நீ கூறுகின்ற பணிந்த மொழிகளை எங்கையர்க்கு வணங்கிக் கூறென இரந்துகோடற் கண்ணும்:

'அகன்றுறை யணிபெற’’ என்னும் மருதக்கலியுள்

நோதக்காய் எனநின்னை நொந்தீவார் இல்வழித் தீதிலேன் யானெனத் தேற்றிய வருதிமன் ஞெகிழ்தொடி இளையவர் இடைமுலைத் தாதுசோர்ந் திதழ்வனப் பிழந்தநின் கண்ணிவந் துரையாக்கால்’’ (73)

என்பன கூறி,

"மண்டுநீ ராரா மலிகடல் போலுநின்

தண்டாப் பரத்தை தலைக்கொள்ள நாளும் புலத்தகைப் பெண்டிரைத் தேற்றிமற் றியாமெனில் தோலாமோ நின் பொய் மருண்டு ' (கவி. 73)

எனவும் எங்கையரைத் தேற்றெனக் கூறியவாறு காண்க.

செல்லாக் காலைச் செல்கென விடுத்தலும் . தலைவன் செல்லாணென்பது இட்முங் காலமும்பற்றி அறிந்த காலத்து ஊடலுள்ளத்தாற் கூடப்பெறாதாள் செல்கெனக் கூறி விடுத்து ஆற்றுதற்கண்ணும்:

புள்ளிமி ழகல்வயல்' என்னும் மருதக்கலியுள் பூங்கட் புதல்வனைப் பொய்பல பாராட்டி நீங்காய் இகவாய் நெடுங்கடை நில்லாதி ஆங்கே அவர் வயிற் சென்றி அணிசிதைப்பான் ஈங்கெம் புதல்வனைத் தந்து' (கலி, 79) எனவும்,

1. எங்கையர் - என் தங்கைமார்; என்றது. பரத்தையரை. 2. செல்லாக்காலை - தலைவன் தன்னை விட்டுச் செல்லமாட்டான்

என்பதனைத் தெளிவாக அறிந்த காலத்து.