பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா கள - இங்க

நிகழ்ந்துழி, அதனைக் குறியென நினைத்து சென் று. அவை அவன்குறியன்மையின் அகன்று மாறுதலாம். யகற்குறிக்கு உதாரணம் வந்துழிக் காண்க.

காணா வகையிற் பொழுது நனி இகப்பினும்-குறிவழிச் செல்லுந் தலைவனை இற்றைஞான்றிற் காண்டல் அரிதென்று கையறுவதோராற்றாற் பொழுது சேட்சுழியினும்:

என்றது. தாய் துஞ்சாமை, ஊர் துஞ்சாமை, காவலர் கடுகுதல், நிலவுவெளிப்படுதல், நாய் துஞ்சாமை போல்வனவற்றால் தலைவன் குறியின்கண் தலைவி வரப்பெறாமல் நீட்டித்தலாம்.

தானகம் புகாஅன் பெயர் தலின்மையிற் காட்சி ஆசையிற் களம்புக்குக் கலங்கி வேட்கையின் மயங்கிய கையறு பொழுதினும்அங்ங்னங் காணாவகையிற் பொழுது நனியிகந்து தலைவி குறி தப்பியக்காலுந் தலைவன் குறியிடம் புகுந்தல்லது பெயரானென்பது தான் அறியுமாதலின், ஆண்டுப் புகுந்தவன் தான் வந்து நீங்கினமை அறிதற்கு ஒரு குறி செய்தன்றி வாளாது பெயரானன்றே? அக் குறிகானுங் காட்சி விரும்பினாற் றலைவி பிற்றைஞான்று விடியலிற் சென்று ஆண்டைக்குறி கண்டு கலங்கி, அவனை எதிர்ப்படுதல் வேட்கையளாகிச் செய்வதறியாது மயக்கத்தோடு கையுறவு எய்தும் பொழுதின் கண்ணும்:

"தான் என்றது தலைவனை. இரவுக்குறியினை 'அக’ மென்றார், இரவுக்குறி எயிலகத்தது என்பதனால். குறியிற் சென்று நீங்குவனெனவே காட்சி அவன்மேற்றன்றிக் குறிமேற்ற்ாம். குறி. மோதிரம், மாலை, முத்தம் முதலியன கோட்டினுங் கொடியினும் இட்டுவைத்தனவாம் ; இவை வருத்தத்திற்கு ஏதுவாம். இது விடியல் நிகழுமென்றற்குப் பொழுதென்றான் ; எனவே காண்பன விடியலிற் காணுமென்றார். மயங்கும்’ என்றதனால் தோழியும் உடன் மயங்கும். அது,

1. தான் அகம் புகாஅன் பெயர்தல் இன்மையின் தலைவன் குறியிடம் புகுந்தல்லது பெயரான் என்பது தான் அறியுமா கலின்.

2. இரவுக்குறி எயிலகத்தது என்பதனால் கண்டு அகம் என்றது இரவுக்

குறியினை,