பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

കീഴ്ക് தொல்காப்பியம் - பொருளதிகாரம்

பறிகொள் கொள்ளையர் மறுக உக்க மீனார் குருகின் கானலம் பெருந்துறை எல்லை தண்பொழிற் சென்றெனச் செலி இயர் தேர்பூட் டயர வேஎய் வார்கோல் செறிதொடி திருத்திப் பாறுமயிர் நீவிச் செல்லினி மடந்தைநின் தோழியொடு மனையெனச் சொல்லிய அளவை தான்.பெரிது கலுழ்ந்து தீங்கா யினளிவ ளாயின் தாங்காது நொதுமலர் போலப் பிரியிற் கதுமெனப் பிறிதொன் றாகலும் அஞ்சுவல் அதனால் சேனின் வருநர் போலப் பேனாய் இருங்கலி யானரெஞ் சிறுகுடித் தோன்றின் வல்லெதிர் கொண்டு மெல்லிதின் வினை இத் துறையும் மான்றின்று பொழுதே சுறவும் ஒதம் மல்கலின் மாறா யினவே எல்லின்று தோன்றல் செல்லா தீமென எமர்குறை கூறத் தங்கி ஏமுற இளையரும் புரவியும் இன்புற நீயும் இல்லுறை நல்விருந் தாததல் ஒல்லுதும் பெரும நீ நல்குதல் பெறினே.” (அகம்.300)

இதனுள், தான் பெரிது கலுழ்ந்து தீங்காயின ளெனவே அக் குறிப்புத் தலைவன் போகாமற் றடுப்பக் கூறியதென்று உணர்ந்து தோழி கூறினாள்.

வாளாண் எதிரும் பிரிவினானும் - வாளாண்மை செய்தற்கு ஒத்த பிரிவு தோன்றிய வழியும் :

ஆண்டுத் தலைவிமேற்றுக் கிளவி மூவகைப் பிரிவினும் பகை வயிற்பிரிவை விதந்தோதி அதிகாரப்பட்டு வருகின்ற களவினுள் அவை நிகழப்பெறா; இதுவாயின வரைவிடை வைத்துப் பிரியவும்

SAASAASAAMAMM

1. வாளாண் எதிரும் பிரிவு என்றது, பகைவயிற் பிரிவின் வேறாக முடியுடை

品 & நி மு. டி பு زانية فنية

வேந்தரின் ஏவலிற் பிரிவும் பிரிவினை. திலகவதியாதை த் திருமணம் பேசி முடித்த

பின் கலிப்பகையார் போர் மேத் சென்றது. வாளாண் எதிரும் பிரிவாகும். பகைவயிற்

பிரிவு என்பது பொது இது சிறப்பு.