பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| | | தொல்காப்பியம்-பொருளதிகாரம்

என்றது, தோழியிற் கூட்டத்துத் தலைவி கூற்று நிகழ்த்துவ ளென்பது உம், நிழுங்கால் நானும் மடனும் பெரும்பான்மை கெட்டு அக் கூற்று நிகழுமென்பது உம், அங்ங்னங் கெடுதலையும் முந்துநூற்கண் ஆசிரியர் நாட்டுதல் உளவென்பது உங் கூறியவாறாயிற்று.

தேரே முற்றன்று நின்னினும் பெரிதே' (கலி, 74)

  • * * * في جمر

பேரே முற் றாய்போல முன்னின்று விலக்குவாய்' (கலி.114)

என்றாற்போல மயக்கம் உணர்த்திற்று.

இனி நானும் மடலுங் கெட்ட கூற்றுத் தோழியை நோக்கிக் கூறுமென மேற்கூறுகின்றான். (கஅ)

ஆய்வுரை

இது, காதலர் இருவர் தம்முள் எதிர்ப்பட்டுக் காணும் காட்சியில் தலைமகளது உள்ளத்தே தோன்றும் வேட்கை தனித்து மீதுார்ந்து வெளிப்படாது நாணொடும் மடனொடும் பிரிவின்றித் தோன்றுதற்குரிய காரணம் கூறுகின்றது.

(இ-ஸ்.) உள்ளத்தெழுந்த வேட்கையை வெளிப்படுத்தாத காதலர் கண்கள் உலகத்தில் இல்லாமையால் (ஒத்த காதலர் இருவரிடையே நிகழ்தற்குரிய களவொழுக்கமாகிய இவ்வொழுகலாறு) ஏமம் (பாதுகாவல்) உடையதாதற் பொருட்டு முற்குறித்த நாணமும் மடனுமாகிய பெண்மைக்குணங்கள் இரண்டும் தலைமகள்பால் நீங்காது உள்ளனவாம் என்று கூறுவர் சான்றோர் எ-று.

சொல்லுதல் - வெளிப்படுத்தல். நாட்டம் - கண். ஏமம், ஏம் என மருவியது. ஏமம் - பாதுகாவல். உற உறுதற்பொருட்டு. இரண்டும் . முன்னைச் குத்திரத்திற் கூறப்பட்ட நாணமும் மடனும்.

மகளிர்பால் என்றும் நீங்காதுளவாதற்குரிய அச்சம் நானம் மடன் என்னும் மூன்றனுள் முதற்கண்ணதாகிய அச்சம் வேட்கை காரணமாக நீங்கினும் நாணம் மடன் என்னும் இரண்டும் தலைமகள்பால் எக்காலத்தும் நீங்காது உளவாம் என்பது கருத்து.