பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சளவியல்-நூற்ப உச் జీణ్ణి.

விட்டுயிர்த்தழுங்கினும் என்பது-மறையாது சொல்லி இரங். கினும் என்றவாறு,

நொந்து தெளிவொழிப்பினும் என்பது-தலைவன் தெளிவித்த தெளிவை நொந்து, அதனை யொழிப்பினும் என்றவாறு.

அச்சம் நீடினும் என்பது-தலைவன் வருகின்றது இ.ை யீடாக அச்சம் மிக்குழியும் என்றவாறு.

பிரிந்தவழிக் கலங்கினும் என்பது-தலைவன் பிரிந்தவழிக் கலக்தி முறினும் என்றவாறு,

அது தாளானெதிரும் பிரிவு. பெற்றவழி மலியினும் என்பது - தலைவனோடு கூட்டம் பெற்றவழி மகிழினும் என்றவாறு.

- வருந்தொழிற்கு அருமை வாயில் கூறினும் என்பது-தலைவின் வருதற்கு இடையீடாகக் காவலர் கடுகுதலான் ஈண்டுவருதல் அரிதெனத் தோழி தலைவிக்குச் சொல்லினும் என்றவாறு.

கூறிய...காலையும் என்பது-தோழி இவ்வாறு கூறியதனை மனங்கொள்ளாத காலத்தினும் என்றவாறு.

மனைப்பட்டு ... அருமறை யுயிர்த்தலும் என்பது-புறத்து விளையாடுதல் ஒழிந்து மனைப்பட்டுக் கலங்கிச் சிதைந்தவழித் திோழிக்குச் சூழ்தலமைந்த அரிய மறைப்பொருளைச் சொல்லலும் என்றவாறு.

எனவே சிதையாதவழித் தோழிக்குச் சொல்லாளாம் என்பது போந்தது. வேட்கை மறைக்கப்படுதலின் மறையாயிற்று.

கைப்பட்டுக் கலங்கல் முதலாகக் கூறிய வாயில் கொள்ளாக்காலை யீறாகச் சொல்லப்பட்ட பன்னிருவகையினும் தலைமகள் தோழிக்கு உரைக்கப்பெறும். அஃது உரைக்குங்கால் மனைப்பட்டுக் கலங்கி மேனி சிதைந்தவழியே உரைக்கப்பெறுவது. ஆண்டும் இதற்கு என்செய்வாம் என உசாவுதலோடுகூடத் தனது காதன்மை தோன்ற உரைக்கும் என்றவாறு. மனைப்புடாக்கால் அவனைக் காண்டலால்