பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கணவியல்-நூற்பா உக భీష్టి, ఢ

குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட்டவாறாகத் தலைவிக்குக் கூற்று நிகழுமிடமும் உணர்த்தியவாறு, ! (21)

நச்சினார்க்கினியம்

இதனுள் தலைவி கூற்று நிகழ்த்துமாறு கூறுகின்றான். சில கூற்றுக்களுள் தன்வயின் உரிமையும் அவன்வயிற் பரத்தையும் பட நிகழ்த்தவும் பெறுமென்கின்றான். அவன்வயின்' எனவே 'தன்'னென்றது தலைவியையாம்; உரிமை களவிலே கற்புக்கடம் பூண்டொழுகல்; எனவுே, புலவியுள்ளத்தாளாகவும் பெறுங் களவினென்பது கருதிப் பரத்தையுமுள என்றான்; ஊடலும் உணர்த். தலும் வெளிப்பட நிகழாமையின் இவை புலவிப் போலி. பரத்தை, அயன்மை. அவன்கட் பரத்தைமை யின்றேனும் காதன்மிகுதியான் அங்ங்னங் கருதுதல் பெண்தன்மை. உம்மை எதிர்மறையாகலின் இவ்விரண்டும் இலவாதலே பெரும்பான்மை.

(இகள்.) மறைந்து அவற் காண்டல்-தலைவன் புணர்ந்து நீங்குங்கால் தன் காதன்மிகுதியால் அவன் மறையுந்துணையும் நோக்கிநின்று அங்ங்ணம் மறைந்தவனைக் காண்டற்கண்ணுத் தோழிக்குக் கூற்றாற் கூறுதலுள :

உ-ம்: 'கழிப்பூக் குற்றும் கானல் அல்கியும்

வண்டற் பாவை வரியன லயர்ந்தும் இன்புறப் புணர்ந்து மிளிவரப் பணித்தும் தன்றுயர் வெளிப்படத் தவறில் நந்துயர் அறியா மையி னயர்ந்த நெஞ்சமொடு செல்லு மன்னோ மெல்லம் புலம்பன்

1. மறைந்தவற்காண்டல், தற்காட்டுறுதல், சொல்லெதிர் மழுங்கல் இம். மூன்றிடத்திலும் கூந்து கிகழாது. வழிபாடு மறுத்தல் குறிப்பினா னும் கூற்றினா னும் வரும், முறுவல் சிறிதே தோற்றல்புணர் தற்கு உடம்பாடு காட்டி கிற்கும். ('மறைந்தவற் காண் டல் முதலாகவுள்ள) இவை ஆறு நிலையும் புணர்ச்சிக்கு முன் நிகழும். ஈண்டும் குறிப்பு நிகழ்ச்சியல்லது கூற்று கிகழ்ச்சி அருகியல்லது வாராது.

2. கற்பின் கண் பரத்தை காரணமாகத் தலைமகள்பால் தோன்றும் புலவி, உணர்த்தலா னன் றி நீங்காது. களவின் கண் தோன்றும் அயன் மை பற்றிய இப்புலவி தலைவன்கண் பரத்தமையின்றியும் தலைவி தனது காதல் மிகுதியால் அங்கனம் ஏறிட்டுக்கொள்ளும் பெண்ணியல்பால் சிறிது போது வெளிப்பட்டுக் கடிதின் மாறும் இயல்பின தாதலின் புலவிப்போலி என்றார்,