பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: தொல்காப்பியம் - பொருளதிகாரம்

இது தோழியிற் கூடிய தலைமகன் கூற்று.

'அவரை பொருந்திய பைங்குரல் ஏனல் கவரி மடமா கதூஉம் படர்சாரல் கானக நாட மறவல் வயங்கிழைக் கியானிடை நின்ற புனை.' (ஐந்திணையெழு-க)

இதனானே முந்துற்ற கூட்டமின்மை யுணர்க. இனி 9@ கூட்டமும் நிகழாது ஆண்டு வந்தடைவேட்கை இருவர்க்கும் தணியாது நின்று வரைந்தெய்தலும் ஒன்று. இவ்வகையினான் இக்களவொழுக்கம்

மூவகைப்படும்.'

க. இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கிற் காமக் கூட்டங் காணுங் காலை மறையோர் தேளத்து மன்றல் எட்டனுள் துறையமை கல்யாழ்த் துணைமையோர் இயல்பே.

1. ஒத்த அன்பினராகிய ஒருவனும் ஒருத்தியும் கல்லூழின் ஆணையால் எதிர்ப்பட்டுக் கூடும் இயற்கைப் புணர்ச்சியிலும் அதனையடுத்து நிகழும் இடங். தலைப்பாடு பாங்கற் கூட்டம் என வரும் கட்டங்களிலுக் தலைவன் தலைவி இருவரும் உள்ளப் புணர்ச்சியளவே கின்று மெய்யுறு புணர்ச்சி நிகழாது இடையீடு பட்டுப் பின்னர்த் தோழியின் துணைபெற்று மெய்யுறு புணர்ச்சி பெறுதலும் உண்டு எனவும், இயற்கைப் புணர்ச்சி, இடங்தலைப்பாடு, பாங்கற் கூட்டம், தோழியிற் கூட்டம் என்னும் கான் கிடத்தும் மெய்யுறு புணர்ச்சி கிகழாதாயின் ஒத்த அன்பின ராகிய இருவருள்ளத்தும் கிளர்ந்தெழுந்த வேட்கை தணியாது நிற்ப, அவ்விருவரும் உலகத்தார் அறிய மணஞ் செய்து பின்னர் மெய்யுறுதல் உண்டு எனவும், இவ். வகையால் இக் களவொழுக்கம் மூவகைப்படும் எனவும் இவ்வுரையில் இளம்பூரணர் குறிப்பிடுகின்றார். அவர் கடறும் மூவகைக் களவொழுக்கமாவன :

(i) இயற்கைப் புணர்ச்சி கிகழும் கிலையிலேயே தலைவன் தலைவியை

மெய்:புறும் களவு,

(i) இயற்கைப் புணர்ச்சி, இடக்தலைப்பாடு, பாங்கற் கூட்டம் என்னும் கூட்டங்களில் உள்ளப் புணர்ச்சியளவே கின்று தோழியிற் கூட்டத்தில் தலைவியை மெய்யுறும் களவு,

(iii) மேற்குறித்த கால்வகைக் கட்டத்தும் உள்ளப் புணர்ச்சியளவே க.டிகின்று உலகத்தார் அறிய மணஞ் செய்து கொண்ட பின் மெய்புறப்பெறும் களவு, என்பனவாம். இங்குக் குறித்த மூன்றாம் வகையினை விளக்கும் முறையில் அமைந்தது கபிலர் ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவுறுத்தற்குப் பாடிய பெருங்குறிஞ்சி

இயன்னும் குறிஞ்சிப்பாட்டாகும்.