பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொல்காப்பியம் -பொருளதிகாரம் حمایت مالی اتی

கையறு தோழி கண்ணிர் துடைப்பினும் - தலைவியை ஆற்று வித்துக் கையற்ற தோழி தலைவி கண்ணிரைத் துடைப்பினும் :

உ-ம்: யாமெங் காமம் தாங்கவும் தாந்தங்

கெழுதகை மையின் அழு தன தோழி கன்றாற்றுப் படுத்த புன்றலைச் சிறாஅர் மன்ற வேங்கை மலர்பத நோக்கி யேறா திட்ட வேயப் பூசல் விண்டோய் விடரகத் தியம்பும் குன்ற நாடற் கண்டவெங் கண்ணே. (குறுந் 241)

இது தன் ஆற்றாமைக்கு ஆற்றாத தோழியை ஆற்றுவிக் கின்றான் அவ்விரண்டுங் கூறியது. .

வெறியாட்டிடத்து வெருவின்கண்னும் - தலைவி வேறுபாடு எற்றினானாயிற்றென்று வேலனை வினாய் வெறியாட்டு எடுத்துழித், தலைவி அஞ்சும் அச்சத்தின் கண்ணும் :

அது பண்டேயுந் தன் பரத்தைமையான் நெகிழ்ந்தொழுகு வான், இன்று நம் ஆற்றாமைக்கு மருந்து பிறிது முண்டென் றறி யின், வரைவு நீடுமென்று அஞ்சுதல்.

உ-ம்: "பணிவரை நிவந்த பயங்கெழு கவாஅன்

துனியில் கொள்கையொ டவர் நமக் குவந்த இனிய உள்ளம் இன்னா வாக முனிதக நிறுத்த நல்க லெவ்வம் சூருறை வெற்பன் மார்புறத் தணிதல்

கண்" என்றார் ஆசிரியர். இவ்வாறன்றி இத்தொடர்க்கு, பொய்ம்மையால் ساما ، லேறுவேன் எனத் தலைவன் கூறிய வழியும் என இளம்பூரணர் கூறும் பொருள், தோழி முதலியோரை அச்சுறுத்தித் தனது வேட்கையை கிறைவேற்றிக் கொள்ளும் கருத்தடன் தலைவன் இவ்வாறு பொய்கறினான் எனத் தன்னிகரற்ற தலைவனைப் பொய்யனாக்குதலின் பொருந்தாது எனச் சுட்டாமல் இத்தொடர்க்குத் தொல் காப்பியர் கருத்துண்ர்ந்து உண்மைப் பொருள் வரைந்த கச்சினார்க்கினியர் உரைத். திறம் நல்லறிஞர்களது பாராட்டுக்குரியதாகும். 1. அவ்விரண்டும் . தன்வயினுரிமையும் அவன் வயிற் பரத்தைமையும்,