பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்ப உச శతో,

அறிந்தன ளல்ல ளன்னை வார்கோல் செறிந்திலங் கெல்வளை நெகிழ்ந்தமை நோக்கிக் கையறு நெஞ்சினள் வினவலின் முதுவாய்ப் பொய்வல் பெண்டிர் பிரப்புளர் பிரீஇ முருக னாரணங் கென்றலின் அதுசெத் தோவத் தன்ன வினைபுனை நல்லில் பாவை யன்ன பலராய் மாண்க.வின் பண்டையிற் சிறக்கவென் மகட்கெனப் பரை இ! கூடுகொள் இன்னியங் கறங்கக் களனிழைத் தாடனி யயர்ந்த அகன்பெரும் பந்தர் வெண்பேர்ழ் கடம்பொடு சூடி யின் சீர் ஐதமை பாணி யிர் இக் கைபெயராச் செல்வன் பெரும்பெயர் ஏத்தி வேலன்

வெறியயர் வெங்களம் பொற்ப வல்லோன் பொறியமை பாவையிற் றுரங்கல் வேண்டின் என்னாங் கொல்லோ தோழி இயங்கிய மையற் பெண்டிர்க்கு நொவ்வ லாக ஆடிய பின்னும் வாடிய மேனி பண்டையிற் சிறவா தாயின் இம்மறை அலரா காமையோ அரிதே அஃதாஅன் நறிவ ருறுவிய அல்லல்கண் டருளி வெறிகமழ் நெடுவேள் நல்குவ னெனினே செறிதொடி புற்ற செல்லலும் பிறிதெனக் கான்கெழு நாடன் கேட்பின் யானுயிர் வாழ்தல் அதனினும் அரிதே." (அகம், 96)

'இன்னாவாக்கி நிறுத்த எவ்வ மென்பது அவன்வயிற் பரத்தைமை. உயிர்வாழ்தல் அரிது’ என்பது தன்வயினுரிமை. அவை வெறியஞ்சியவழி நிகழ்ந்தன.

குறியின் ஒப்புமை மருடற் கண்ணும் - இரவுக்குறி வருந் தலைவன் செய்யங்குறி பிறிதொன்றனான நிகழ்ந்து தலைவன் குறியை ஒத்தவழி, அதனை மெய்யாக உணர்ந்து தலைவி மயங்கிய வழியும் : புனலொலிப்படுத்தன் முதலிய அவன் செயற்கையானன்றி இயற்கையான் நிகழ்த்துழிக் குறியினொப்புமையாழ்.