பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல் -நூற்ப உக அதிக

செய்த அடையாளம் பிற இயற்கை நிகழ்ச்சிகளால் தப்பினமையால் இது தலைவன் செய்த அடையாளமோ பிறிதொன்றோ எனக் தெளியாத நிலைமைக்கண் குறியிடத்து வந்த தலைவன் தன்னைக் காணப்பெறாது வறிதே திரும்பினானாக அவன் வந்து சென்ற வெற்றிடத்தினை நோக்கி "இத்தவறு என்னால் நேர்ந்ததே எனத் தலைவனைக் குற்றமிலானாகத் தன் மனத்திற்கருதித் தெளிதலும், தலைவனைத் தோழி இயற்பழித்தவழி அவனைக் குற்றமில்லாதவனாக நிறுவி இயற்பட மொழியும் பொருளின் கண்ணும், தலைவன் வரும் காலமும் வழியும் ஒத்ததல்லாமையால் துன்ப மீதுார்ந்த நெஞ்சத்தினளாய நிலையிலும், தலைமகன்பால் வேட்கை மிக்க நிலையிலும், தன்பால் அவன் வைத்துள்ள தலையளி மிக்க நிலையிலும், தம்மிருவர் பாலும் பாதுகாவலமைந்த மகிழ்ச்சி மீக்கடர்ந்த நிலையிலும் (இவைபோன்ற பிறவிடங்களிலும்) நிகழும் தலைமகள் கூற்றுகளில் தலைவி தான் அவனுக்கு உரியனாத்திறத்தில் ஒழுகுவதாகவும் அவன் தன்னை அயன்மைசெய்து ஒழுகுவதாகவும் எண்ணும் உணர்வுகள் ஒரோரிடங்களில் தோன்றுவனவும் உள எ-று.

மறைந்தவற் காண்டல், தற்காட்டுறுதல், நிறைந்த காதலிற் சொல்லெதிர் மழுங்கல் என்னும் மூன்றும் தலைமகளது உள்ள நிகழ்ச்சியினைப் புலப்படுத்துவனவாதலின் இம்மூன்றிடங்களிலும் கூற்று நிகழ்தல் இல்லை. வழிபாடு மறுத்தல் என்பது குறிப்பினாலும் கூற்றினாலும் நிகழும். மறுத்தெதிர் கோடல், முறுவல் சிறிதே தோற்றல் என்பன இரண்டும் தலைவனுடன் அளவளாவி மகிழ்தற்கு இசைவினைப் புலப்படுத்துவன. இங்குச் சொல்லப்பட்ட ஆறும் புணர்ச்சிக்கு முன் நிகழ்வன கைப்பட்டுக் கலங்கல் முதல் கூறியவாயில் கொள்ளாக்காலை முடியவுள்ள பன்னிரு நிலைகளும் தலைமகள் தோழிக்குத் தன் உள்ளக் கருத்தினை எடுத்துரைத்தற். குரியன. இப்பன்னிரு நிலைகளும் தலைமகள் ஒருத்தியால் ஒருங்கே நிகழ்தல் வேண்டும் என்னும் வரையறையில்லை. தலைவி தன் உள்ளக் கருத்தினை வெளியிட்டுரைத்தற்குரிய இடங்க இலக்கணம் கூறும் அளவிலேயே இப்பன்னிரண்டும் இங்குக் குறிக்கப். பெற்றன. தலைவி தன் உள்ளக் கருத்தினைத் தோழிக்கு உரைத்தல் என்பது தான் இற்செறிக்கப்பட்டுக் கலங்கித் தன் மேனி மெலிவுற்ற நிலையிலேயேயாம். தலைவி இற்செறிக்கப்பெறாத நிலையில் தலைவ.

ள் இவை என