பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உடி 5彎瓣

துணையும் ஆற்றாது வருத்தமுறினும் வரையாத நாளின் கண் மறைந்தொழுகா நின்ற தலைவன் செவிலி முதலாயினாரை முட்டின. வழியும் இவ்வொழுக்கத்தினை நின் தோழிக்கு உரையெனத் தலைவன் கூறிய வழியும் தலைவி தானே கூறுங் காலமும் உள எ-று.

உம்மை எதிர்மறையாதலாற் கூறாமை பெரும்பான்மை, காலமும் என்றது. இவ்வொழுக்கம் புறத்தார்க்குப் புலனாங் காலம். அக்காலத்துத் தோழி மதியுடம்படாமல் அறிவிக்கும் என்றவாறு’.

இன்னும், "உரையெனத் தோழிக் குரைத்தற் கண்ணும்’ என்பதற்குத் தலைவற்கு உரையெனத் தோழிக்கு உரைத்தற் கண்ணும் என்றுமாம், உதாரணம்

"என்னைகொல் தோழி அவர்கண்ணும் தன்சில்லை

அன்னை முகனும் அதுவாகும்-பொன்னலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ

நின்னல்ல தில்லென் றுரை (ஐந்தினையெழு.58) என வரும், நச்சினார்க்கினியம் (22)

இதுவும் அதிகாரத்தால் தலைவிகூற்று இன்னவாறுமம் என்கிறது.

(இ - ள்.) வரைவிடைவைத்த காலத்து வருந்தினும்-வரைவு. மாட்சிமைப் படா நிற்கவும் பொருள்காரணத்தான் அதற்கு இடை. யீடாகத் தலைவன் நீக்கி வைத்துப் பிரிந்த காலத்துத் தலைவி வருத்தமெய்தினும்:

ஆண்டுத் தோழி வினவாமலும் தானே கூறுமென்றான், ஆறறுவித்துப் பிரிதல் களவிற்குப் பெரும்பான்மை இன்மையின் வைத்தவென்றது நீக்கப்பொருட்டு. வருந்துதல் ஆற்றுவிப்பாரின்மையின் வருத்த மிகுதலாம்.

1. முட்டுதல்.எதிர்ப்படுதல். தானே கூறுதலாவது, தோழி தன்னை 'ஐயுற்று வினா தற்கு முன்னரே தலைவி முக்து ற்றுத் தோழிக்கு உரைத்தல்.

2. பாங்கி மதியுடம்படுதற்கு முன்னரே தலைவி தோழிக்கு அறிவிக்கும என்பதாகும்.