பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உஉ கடுக

'ஐயோ வெனயாம் பையெனக் கூறிற்

கேட்குவர் கொல்லோ தாமே மாக்கடற் பரூஉத்திரை தொகுத்த துண்கண் வெண்மணல் இன்னுந் துரா கானவர் பொன்னி னெடுந்தேர் போகிய நெறியே.”

இஃது, அவர் இன்னும் போவதற்குமுன்னே நம் வருத்தத்தை வெளிப்படக் கூறென்றது.

"என்னைகொல் தோழி யவர்கண்ணு நன்கில்லை

அன்னை முகனு மதுவாகும்-பொன்னலர் புன்னையம் பூங்கானற் சேர்ப்பனைத் தக்கதோ நின்னல்ல தில்லென் றுரை.” (ஐந். எழு. 58)

இதுவும் தலைவற்குக் கூறென்றது.

இவை தலைவி. அறத்தொடு நிற்றற்பகுதி. தோழிக்கே உரைத்தற்குத் தோழிக்கென்றார்." (22)

ஆய்வுரை

இது, தோழி தன்னை வினவாத நிலையில் தலைமகள்தான்ே முற்பட்டுத் தோழிக்குக் கூறுமிடங்கள் இவையெனத் தொகுத்துக் கூறுகின்றது.

(இ-ஸ்.) இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கிய தலைவன் இன்ன நாளில் நின்னை மணந்து கொள்வேன் எனக் கதித் தோழியிற் கூட்டத்திற்கு முயலாது வரைவிடைவைத்துப் பொருள். வயிற் பிரிந்தானாக, தோழி தன்னைக் கண்டு ஐயுறுதற்கேற்ற குறிப்பு தன்கண் தோன்றாது மறைத்தொழுகிய தலைவி தலைவன் வருமளவும் ஆற்றியிராது வருத்தமுற்ற நிலையிலும், வரைந்துகொள்ளும் முயற்சியின்றிக் களவொழுக்கத்தில் வந்தொழுகும் தலைவன் செவிலி முதலியோரை எதிர்ப்பட்ட நிலையிலும், இவ். வொழுக்கத்தினை நின் உயிர்த் தோழிக்குச் சொல்லுக எனத் தலைவன் தனக்குச் சொல்லிய நிலையிலும் தலைமகள் தானே முற்பட்டுத் தோழி க் கு க் கூறும் காலமும் உள எறு.

1. இக் கூற்றெல்லாம் தோழிக்குக் கூறுதற்குரியன் என்பார், டிரையென்த்' தோழிக்கு உரைத் தற்கண்ணும் என்றார் ஆசிரியர்.