பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笠。リ。 தொல்காப்பியம்-பொருளதிகாரம்

(இபள்.) எல்லாவற்றினும் சிறந்த உயிரைவிட மகளிர்க்கு நாணம் என்னும் பண்டே இன்றியமையாச் சிறப்பினது. அத்தகைய நாணத்தை விடக் குற்றமற்ற நல்லறிவின் வெளிப்பாடாகிய கற். புடைமையே இன்றியமையாச் சிறப்பினதாகும்’ என முன்னோர் வாய்மொழியைப் பொருந்திய நெஞ்சத்துடனே தனது காதற்குரிய தலைவன் இருந்த விடத்தே தானே செல்லுதலை விரும்பிய நிலையிலும், தனது பிரிவுத் துயரத்தைப் பொறுக்கும் சனவன்மையின் றித் தலைவனுள்ளவிடத்தே செல்வாம்’ என்னும் நன்மொழியினைத் தலைவி கூறுதற் கண்ணும் அவை போன்ற கூற்றுவகை பிறவற்றின்கண்ணும் தலைமகள்பால் காதல் மிகுதியாகியமிக்கபொருள்கள் தோன்றும் எ-று.

சிறந்தன்று சிறந்தது; செயிர் குற்றம்.

காட்சி என்பது ஈண்டு நல்லறிவின் வெளிப்பாடாகிய தோற்றத். தினைக் குறித்து நின்றது. கற்பு - உள்ளத் திண்மை; அஃதாவது தான் விரும்பிய ஒருவனையே தன்னுயிர்த் தலைவன் எனப் பேணிப் போற்றும் ஒருமையுள்ளமுடைமை. தொல்லோர் கிளவி-தொன்மைக் காலத்து வாழ்ந்த பெரியோர் கூறிய வாய்மொழி. புல்லிய நெஞ்சம்உறுதியாகப் பற்றியவுள்ளம். காமக் கிழவன்-தன்னாற் காதலிக்கப் பெறும் உரிமை வாய்ந்த தலைவன். உள்வழி-உள்ள இடம். படுதல்சென்று பொருந்தும். 'தா' என்னும் உரிச்சொல் ஈ.ண்டு வன்மை. யென்னும் பொருளில் ஆளப்பெற்றது.

தா இல் மொழி, நன்மொழி எனத் தனித்தனி இயையும். தலைவி தனது பிரிவுத் துயரத்தைப் பொறுக்கும் மனவன்மையின்றித் தளர்வுற்ற நிலையிற் கூறப்படும் மொழி என்பார் தா இல் மொழி எனவும், கற்பென்னும் நற்பொருளைப் புலப்படுத்தும் மொழி என்பார் நன்மொழி எனவும் அடைபுணர்த்தோதினார் ஆசிரியர் ஆவகை பிறவும் . அவை போன்ற கூற்றுவகை பிறவற்றின் கண்ணும், மன்பொருள் தோன்றும் என்பதாம். மன்பொருள் காதல் மிகுதியாகிய மிக்க பொருள்.