பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உக ぶ ór 筆

தலைவன் அன்புடைமையின் அளிப்பன் என ஆற்றுவித்த வற்புறுத்த ற் கண்ணுந் தோழிகூற்று நிகழும் என்றவாறு. -

செங்கடுமொழி' என்றது-கொடிய கடுமொழியேயன்றி மனத்தி னான் இனியளாகிக் கூறும் கடுமொழி. அஃதாவது இயற்பழித்தல். அவ்வாறு இயற்பழித்தவழித் தலைவன் அன்பு சிதைவுடைத்தாயினும் என்றவாறு. அன்புதலையடுத்த வன்புறையாவது தலைவன் இன்றி யமையான் என ஆற்றுவித்தல். -

ஆற்றது தீம்ை அறிவுறு. கலக்கமும்...வரைதல் வேண்டியும் என்பது-தலைவன் வருநெறியினது தீமையைத் தாங்கள் அறிவுற்ற தனால் எய்திய கலக்கத்தானும் காவற் கடுமை வரையிறந்ததனானும் குறியிடமும் காலமுமாகத் தாங்கள் வரைந்த நிலைமையை விலக்கித் தலைவி காதல் மிகுதல் உட்படப் பிறவுத் தலைவனது நாடும் ஊரும் இல்லும் குடியும் பிறப்பும் சிறப்பும் மிகுதியும் நோக்கித் தலைவன் மாட்டுக் கிளக்குங் கிளவியோடே கூட அத்தன்மைத்தாகிய நிலவகை யினானே வரைதல் வேண்டியும் தோழி கூறும் என்றவாறு,

இன்னும் பிறவும் என்றதனால் தலைமகள் தன்னை யழிந்தமை கூறுதலுந் தலைவன்மாட்டு வருமிடையூறு அஞ்சுதலுங் கொள்க. அது வருமாறு:

தன் எவ்வங் கூரினும் நீ செய்த அருளின்மை என்னையு மறைத்தாள் என்தோதி அதுகேட்டு நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூறல் தான் நாணி’’ கலி. 44)

இது, தலைமகள் தன்னை அழிந்ததற்கண் வந்தது.

'கரைபெசரு கான்யாற்றங் கல்லத ரெம்முள்ளி வருதிராயின் அரையிருள் யாமத் தடுபுலியோ நும்மஞ்சி யகன்று போக நரையுருமே ஆங்கைவேல் அஞ்சுக தும்மை வரையர மங்கையர் வவ்வுத லஞ்சுதும் வார லையோ.’’

இஃது அவனுாறு அஞ்சுதற்கண் வந்தது.

1 . செம்மொழி ... தாயின்று.