பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உச リTf五.

பிறவு மன்ன,

ஐயச் செய்கை தாய்க் கெதிர்மறுததுப் பொய்யென மாற்றி மெய்வழிக் கொடுப்பினும் என்பது தலைவிக்குப் பிறரோடு கூட்ட முண்டெனச் சொல்லி ஐயுற்றவழி, அதனை மறுத்துத் தலைவி செய்த செய்கையைப் பொய்யென் நீக்கிப் பிறிதோர் ஆற்றான் மெய்வழிக்கட்படுத்தினும் என்றவாறு.

அஃதாமாறு தலைவி குறிவழிச் செல்கின்றதனைக் காண்டல்.

அவள் விலங்குறினும் ...... தாயிடைப்புகுப்பினும் என்பது - தலைவி காப்பு மிகுதியானுங் காதன் மிகுதியானும் நொதுமலர் வரைவிாைனும் தமர் வரைவு மறுத்ததினானும் வேறுபட்டவழி இஃது எற்றினான் ஆயிற்று எனச் செவிலி அறிவரை வினாஅய்க் குறி. பார்க்கும் இடத்தினும், அஃதன்றி வெறியாட்டிடத்தினும், பிறர் வரைவு வந்துழியும் அவர் வரைவு மறுத்தவழியும், முன்னிலை வகையானாதல் அறத்தொடுநிலை வகையானாதல் இவ்விருவகையானுந் தலைவற்கும் தலைவிக்கும் தனக்குங் குலத்திற்கும் குற்றந் தீர்ந்த கிளவியைத் தாய்மாட்டுப் புகுதவிடுத்தலும் என்றவாறு.

புகுதவிடுத்தலாவது நி ர ம் ப ச் சொல்லாது தோற்றுவாய் செய்தல்.

'கடவுட் கற்சுனை அடைவிறந் தவிழ்ந்த

பறியாக் குவளை மலரொடு காந்தள் குருதி ஒண்பூ உருகெழக் கட்டிப் பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள் அருவி இன்னியத் தாடு நாடன் மார் புதர வந்த படர்மலி யருநோய் நின்னணங் கன்மை யறிந்தும் அண்ணாந்து கார்தறுங் கடம்பின் கண்ணி துடி வேலன் வேண்ட வெறிமனை வந்தோய் கடவு ளாயினும் ஆக மடவை மன்ற வாழிய முருகே. ’’ (நற்றினை. 34)