பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శ్రీ ': தொல்காப்பியம் -பொருளதிகாரம்

இது, முருகனை முன்னிலையாகக் கூறியது. பிறவுமன்ன.

"ஆன்னை வாழிவேண் டன்னை முழங்குகடல் திரைதரு முத்தம் வெண்மணல் இமைக்குந் தண்ணந் துறைவன் வந்த்ெனப் பொன்னினுஞ் சிறந்தன்று க்ண்டிசின் துதலே'.

(ஐங்குறு. 105) இது, முன்னிலைப் பகுதி: நொதுமலர் வரைவுபற்றி வந்தது.

"குன்றக் குறவன் காதல் மடமகள்

அணிeயி ன்ைன அசைதடைக் கொடிச்சியைப் பெருவரை நாடன் வரைவு மாகில் தொடுத்தனம் ஆயின தன்றே இன்னும் ஆனாது நண்ணுறு துயரே...' (ஐங்குறு. 256)

இஃது அவன் வரைவு மறுத்துழிக் கூறியது.

இனி. அறத்தொடுநிலைப் பகுதி எழுவகைப்படும். அவிையா மாறு:

"எளித்தல் ஏத்தல் வேட்கை யுரைத்தல் கூதுதல் உசாவுதல் ஏதீடு தலைப்பாடு உண்மை செப்புங் கிளவியொடு தொகைஇ அவ்வெழு வகைய என்மனார் புலவர்” (பொருளியல், 192}

எனப் பொருளியலுட் கூறிய சூத்திரத்தானே கொண்க .

எளித்தல் என்பது-தலைவன் நம்மாட்டு எளிய னென்று கூறுதல். அதனது பயம் மகளுடைத்தாயர் தம்வழி ஒழுகுவார்க்கு மகட்கொடை வேண்டுவ ராதலான், எளியனென்பது கூறி அறத் தொடு நிற்கப் பெறு மென்றவாறு.

அன்னை அறியினும் அறிக அலர்வாய் அம்மென் சேரி கேட்பினுங் கேட்க பிறிதொன் றின்மை அறியக் கூறிக் கொடுஞ்சுழிப் புகாஅர்த் தெய்வ நோக்கிக் கடுஞ்க்ள் தருகுவல் நின்க்கே கானல் தொடலை ஆயமொடு கடலுடன் ஆடியுஞ்