பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா உச 哥675了

கூறுதலாவது-தலைவியைத் தலைவற்குக் கொடுக்கவேண்டு மென்பதுபடக் கூறுதல்.

உதாரணம்:

'வாடாத சான்றோர் வரவெதிர் கொண்டிராய்க்

கோடாது நீர் கொடுப்பின் அல்லது-வாடா எழிலும் முலையும் இரண்டிற்கு முந்நீர்ப் பொழிலும் விலையாமோ போந்து’ (திணைமாலை. 15)

என வரும்.

'கறிவளர் சிலம்பிற் கடவுட் பேணி

அறியா வேலன் வெறியெனக் கூறும் அதுமணங் கொள்குவை அன்னையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய தோய்க்கே’’

(ஐங்குறு. 243)

எனவும் வரும்,

உசாவுதல் என்பது-வெறியாட்டுங் கழங்கும் இட்டுரைத்துழி வேலனோடாதல் பிறரோடாதல் தோழி உசாவுதல்.

'முருகயர்ந்து வந்த முதுவாய் வேல

சினவல் ஒம்புமதி வினவுவ துடையேன் பல்வே றுருவிற் சில்லவிழ் மடையொடு சிறுமறி தோன்றிய வன்றுநுதல் நீவி வணங்கினை கொடுத்தி யாயின் அணங்கிய விண்டேர் மாமலைச் சிலம்பன் தண்டா ரகலமும் உண்ணுமோ பலியே.’’ (குறுந் 362)

இது, வேலனொடு உசாவுதல்,

'இன்றியாண் டையனோ தோழி குன்றத்துப்

பழங்குழி அகழ்ந்த கானவன் கிழங்கினோடு உண்ணமை மதுத்துளி பெறுஉ நாடன் அறிவுகாழ்க் கொள்ளும் அளவைச் செறிதொடி எம்மில் வருகுவை நீயெனப் பொம்மல் ஓதி நீவி யோனே.” (குறுந் 137)