பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களவியல்-நூற்பா a酸 蔷岛

உண்டியாவது, பண்டு பான் முதலிய கொண்டு ஒறுத்து ஊட்ட உண்டு வருகின்றாள், இப்பொழுது ஆசாரமும் நானுங் காதலும் மீது அதன்மேல் உவப்பு ஆண்டு இன்றி மிக ஒறுத்த

உள்ளத்தளாதல் .

செய்வினை மறைத்தலாவது, முன்பு போலாது இக் காலத்து நினைவுஞ் செயலுந் தலைவனொடு பட்டனவே யாகலான் அவை பிறர்க்குப் புலனாகாமை மறைத்தல் , அஃது ஆயத்தோடு கூடாது இடந்தலைப்பாட்டிற்கு ஏதுவாக நீங்கி நிற்றலாம்.

செலவாவது, பண்டுபோல் வேண்டியவாறு நடவாது சீர்பெற நடந்து ஓரிடத்துச் சேறல்.

பயில்வாவது, செவிலி முலையிடத்துத் துயில் வேண்டாது பெயர்த்து வேறொரிடத்துப் பயிறல், இன் : சாரியை,

புணர்ச்சி எதிர்ப்பாடு-எதிர்ப்பாட்டுப் புணர்ச்சியென மாற்றுக. அது கொடுப்பாரும் அடுப்பாருமின்றி இருவருந் தமியராய் எதிர்ப் பட்டுப் புணரும் புணர்ச்சி. இவ் வொழுக்கம் பாங்கற் கூட்டத்திற்கு ஏதுவாகா.

உள்ளுறுத்து வரூஉம் உணர்ச்சி ஏழினும் உணர்ந்த பின்றைஅப் புணர்ச்சி யெதிர்ப்பாடு நிகழ்ந்ததனைத் தோழி தன்னுள்ளத் துள்ளே வினாவி வருகின்ற ஐயவுணர்வினை அவ்வேழனானுந் தெளிந்து புணர்ச்சி உண்டென்பதனை உணர்ந்தபின்றை :

இன்னதும் இன்னதுமாகிய ஏழென்க. அங்ங்னந் துணிந்த பின்னல்லது, தலைவிமாட்டுத் தோழி சொன்னிகழ்த்தாளென்றற்குப் * பின்றை யென்றார். உ.ம்: "காம்பிவர் தோளுங் கிருமதர் மழைக்கனும்

வீங்கிள முலையும் வேறுபட் டனவே தாங்கரு நாற்றந் தலைத்தலை சிறந்து பூங்கொடிக் கிவர்ந்த புகற்சியென வாங்கிற் பகலும் கங்குலு மகலா தொழுகுமே நன்றி யளவைத் தன்றிது எவன்கொன் மற்றிவட் கெய்திய வாறே, இதனுள் நாற்றமுந் தோற்றமுஞ் செலவும் வந்தன.