பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

تثقيوي تقييتي

தொல்காப்பியம்-பொருளதிகாரம்

பல் பூங் கானற் பவத்திரி யனவிவள் நல்லெழில் இளநலந் தொலைய வொல்லெனக் கழியே யோத மல்கின்று வழியே வள்ளெயிற் றரவொடு வயtன் கொட்குஞ் சென்றோன் மன்ற மான்றின்று பொழுதென நின்றிறத் தவலம் வீட இன்றிவண் சேப்பின் எவனோ பூக்கேழ் புலம்ப பசுமீன் நொடுத்த வெண்ணென்மாத் தயிர்மிதி மிதவை மாவார் குநவே நினக்கே வடவர் தந்த வான் கேழ் வட்டம் குடபுல வுறுப்பிற் கூட்டுபு நிகழ்த்தி வண்டிமிர் நறுஞ்சாந் தணிகுவந் திண்டிமில் எல்லுத் தொழின்மடுத்த வல்வினைப் பரதவர் கூர்வளிக் கடுவிசை மண்டலிற் பாய்ந்துடன் கோட்சுறாக் கிழித்த கொடுமுடி நெடுவலை தண்கட லசைவளி யெறிதொறும் வினைவிட்டு முன்நிற் றாழைத் துரங்குந் தெண்டிரைப் பரப்பினெம் உறைவின் ஊர்க்கே’’ (அகம்.340)

இதனுள் தனக்கும் புரவிக்குங் கொடுப்பன கூறித் தடுத்த

வாறு காண்க.

'நாள்வலை முகந்த" (அகம். 300) என்பதும் அது.

புணர்ந்துழி உணர்ந்த அறிமடச் சிறப்பினும் - இயற்கைப்

புணர்ச்சி நிகழ்ந்தகாலத்து அவன் தீங்கு உணராதவனை நன்றாக உணர்ந்த அறிவினது மடப்பங்கூறித் தங் காதற்சிறப்பு உரைத்த இடத்தும் :

உ-ம: சுரஞ்செல் யானைக் கல்லுறு கோட்டின்

தெற்றென இlஇயரோ வைய மற்றியாம் நும்மொடு நக்க வால்வெள் ளெயிறே பாணர் பசுமீன் சொரிந்த மண்டைபோல் எமக்கும் பெரும்புல வாகி நும்மும் பெறேளம் இநீஇயரெம் முயிரே...' (குறுந்,169)

. உணராதலனை" என்பதனை உணராது அவனை' என இருசொல்.

லாகப் பிரித்துரைக்க, உணர்தல் - நற்பண் பினனாகத் தெளிதல்.