பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/207

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. கி.அ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

காப்பின் கடுமை கையற" வரினும் - காத்தற்றொழிலால் உண்டாங் கடுஞ்சொற்கள் களவொழுக்கத்திடத்தே எல்லையற வருமிடத்தும் : தோழிமேன கிளவி, அவை பலவகைய.

களனும் பொழுதும் வரைநிலை விலக்கிக் காதன் மிகுதி உளப்பட- (காதன் மிகுதி உளப்படக் களனும் பொழுதும் வரைநிலை விலக்கி) அவளிடத்துக் காதன் மிகுதி மனத்து நிகழா நிற்க இருவகையிடத்தையும் இருவகைக் காலத்தையுந்தாம் வரைந்து கூறும் நிலைமையைத் தவிர்த்து அவன் வயின் தோன்றிய கிளவியையும்; பிறவும் - கூறியவாறன்றிப் பிறவாறாக அவன் வயின் தோன்றிய கிளவியையும்; நாடும் ஊரும் இல்லுங் குடியும் பிறப்பும் சிறப்பும் இறப்பு நோக்கி அவன் வயின் தோன்றிய கிளவியொடு தொகைஇ-அவன் பிறந்த நாடும் அதன் பகுதியாகிய குடியிருப்பும் அவ்வூர்க்கு இருப்பாகிய மனையும் பார்ப்பார் முதலிய நால்வகை வருணமும் அவ் வருணத்துள் இன்னவழி இவனென்றலும், ஒரு வயிற்றுப் பிறந்தோர் பலருள்ளுஞ் சிறப்பித்துக் கூறலும் பிறரின் ஒவ்வாதிறந்தனவாதல் நோக்கித் தலைவனிடத்தே தோழி கூறிய கிளவியோடே கூடி; அனைநிலை வகையான் வரைதல் வேண்டினும். அத் தன்மைத்தாகிய நிலைமையின் கூறுபாட்டானே வரைந்து கோடலை விரும்பியவழியும் தோழிமேன கிளவி.

பகற்புணர் களனே’ (தொல்-பொ-132), இரவுக்குறியே யில்’ (தொல்-பொ-131), குறியெனப் படுவது' (தொல்-பொ-130) என்னுஞ் சூத்திரங்களாற் களனும் பொழுதும் உணர்க.

'கோழிலை வாலைக் கோண்மிகு பெருங்குலை

பூழற திங்கனி யுண்ணுநர்த் தடுத்த சாரற் பலவின் சுளையோ டுழ்படு பாறை நெடுஞ்சினை விளைந்த தேறல் அறியா துண்ட கடுவ னயலது கறிவளர் சாந்த மேறல் செல் லாது

1. கை . எல்லை; அற - க - க.க. 2, ‘காதல் மிகுதியுளப்படக் களனும் பொழுதும் வரை நிலைவிலக்கி என இயைத்து உரை வரை வர்.

காதல் மிகுதி உளப்பட - அவரிடத்துக் காதல் மிகுதி மனத் து கிகழாகிற்க 3. இறப்பகோக்கி - பிறரில் ஒவ்வாது இறக்தன (மேற்பட்டன) ஆதல் நோக் கி.