பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/209

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

φ, ώύ தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இன்னும் அனைநிலைவகை என தனாலே தலைவி யாற். றாமை கண்டு வரைவுகட்ாவவோவென்று தலைவியைக் கேட்ட லுஞ் சிறைப்புறமாகவுஞ் சிறைப்புறமன்றாகவும் தலைவி யாற்றாமை கூறி வரைவுகடாவுவனவும் பிறவும் வேறுபட வருவனவும் இதனான் அமைக்க.

ஐயச் செய்கை தாய்க்கு எதிர்மறுத்துப் பொய் என மாற்றி மெய் வழிக் கொடுப்பினும் தலைவிக்குக் கூ ட் டம் உ ண் டு கொலென்று தாய் ஐயுற்றவழி அவ் வையப்பட்ட செய்கையைத் தாய்க்கு எதிரேநின்று மறுத்து அதனைப் பொய்யெனவே கருதும் 粤器、 அவள் மனத்தினின்றும் போக்கிப் பொய்யல்லன சில சொற்களை மெய்வழிப்படுத்து அறிவுகொள்ளக் கொடுப்பினும் ;

உ-ம்: 'உருமுரறு கருவிய பெருமழை தலைஇப் பெய்லான் றவிந்த தூங்கிருள் நடுநாள் மின்னுநிமிர்ந் தன்ன கணங்குழை பிமைப்பப் பின்னுவிடு நெறியிற் கிளைஇய கூந்தலள் வரையிழி மயிலின் ஒல்குவனள் ஒதுங்கி மிடையூர் பிழியக் கண்டனென் இவளென அலையல் வாழிவேண் டன்னை நம் படப்பைச் சூருடைச் சிலம்பிற் சுடர்ப்பூ வேய்ந்து தாம்வேண் டுருவின் அணங்குமார் வருமே நனவின் வாயே போலத் துஞ்சுநர்க் கனவாண்டு மருட்டலும் உண்டே இவள்தான் சுடரின்று தமியளும் பணிக்கும் வெருவர மன்ற மராஅத்த கூகை குழறினும் நெஞ்சழிந் தரணஞ் சேரும் அதன்றலைப் புலிக்கணத் தன்ன் நாய்த்த்ொடர் விட்டும் முருக னன்ன சீற்றத்துக் கடுந்திறல் எந்தையும் இல்ல னாக அஞ்சுவள் அல்லளோ இவளிது செயலே. (அகம். 158)

இது மிடையே ஏறி இழிந்தாளென்றது காரணமாக ஐயுற்ற தாயைக் கனவு மருட்டலும் உண்டென்றது முதலாகப் பொய்யென மாற்றி அணங்கும் வருமென மெய்வழிக் கொடுத்தது.