பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உடுக தொல்காப்பியம்-பொருளதிகாரம்

இஃது அறத்தொடு நின்றபின் வரைவான் பிரிந்து நீட்டித்துழி ஐயுற்ற செவிலி அவன் நும்மைத் துறந்தான் போலும் துங்கட்கு அவன் கூறியதிறம் யாதென்றாட்குத் தோழி கூறியது.

'அன்னை வாழிவேண் டன்னை கழனிய முண்டக மலருந் தண்கடற் சேர்ப்பன் எந்தோள் துறந்தன னாயின் எவன்கொன் மற்றவ ளயந்த தோளே." (ஐங்குறு. 108)

இஃது அறத்தொடு நின்றபின் வரைவுநீட மற்றொரு குல மகளை வரையுங்கொலென்று ஐயுற்ற செவிலி குறிப்பறிந்த தோழி அவட்குக் கூறியது.

"அன்னை வாழிவேண் டன்னை புன்னையொடு

ஞாழல் பூக்குந் தண்ணத் துறைவன் இவட்கமை ந் தனனாற் றானே தனக்கமைந் தன் றிவண் யாமைக் கவினே."

(ஐங்குறு 103)

இது. வதுவை நிகழாநின்றுழித் தாய்க்குக் காட்டித் தோழி கூறியது.

'கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற்

கென்னை பொருணிணைந்தா ரேந்திழாய் - பின்னர் எமரேற்றுக் கொள்ளுமென் றஞ்சினே னஞ்சார் நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.”

இது சுற்றத்தார் பொருள்வேண்டி மறுத்தாரென்றது.

'நொதும லாளர் கொள்ளா ரிவையே

யெம்மொடு வந்து கடலாடு மகளிரும் நெய்தலம் பகைத்தழைப் பாவை புனையார் உடலகங் கொள்வோ ரின்மையிற் றொடலைக் குற்ற சில பூ வினரே.” (ஐங்குறு. 187)

இது கையுறை மறுத்தது.