பக்கம்:தொல்காப்பியம் களவியல் உரைவளம்.pdf/217

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உல்அ தொல்காப்பியம் -பொருளதிகாரம்

மேற்சொல்லப்பட்ட மூவகையானும் தலைமகளொடு தலைவனுக்குக்

கூட்ட முண்மையுணர்ந்தபின் தலைவன்பாற் பணிவுடன் ஒழுகுமிடத்தும், தலைமகன்பாற் குறைநேர்ந்தாள் அவனது குறைநயப். பித்தல் வேண்டித் தலைமகள்பாற் ச்ெல்லுதற்கண்ணும், தான் குறிப்பால் உணர்த்தும் குறைநய்ப்பிற்குத் தலைமகள் நாண்மிகுதியாற் கரந்தவுள்ளத்தினளாய் உடம்ப்டாதாள் போன்று ஒதுங்கிய நிலையில் தன்னோடும் அவளோடும் குறிப்பினாற் பொருந்திய செய்திகளைக் கட்டிக் கூறி வழிபட்டுமுயலும் பல்வேறு பகுதிக்கண்ணும், தலைவி குறைநயந்தமை பெற்றவழி அதனைத் தலைமகனுக்கு உணர்த்து

மிடத்தும், எண்ணுதற்கு அரிய பலவாகிய நகைக்குறிப்புடைய உரையாடல்களைக் கருதிய பகுதியிலும், தலைவன் தலைவியுடன் அளவளாவுதலை விரும்பியவிடத்தும், தன்னுள்ளம் விரும்பாத பிரிவினை வேண்டிய காலத்தும். தலைவனை விருந்தாக ஏற்றுப் போற்றுவதனைத் தலைவி விரும்பியகாலத்தும், தலைவனொடு தலைவி கூடியவழி அதனையறியாதாள் போன்று பழகும் அறிவுமடம்ப்ட்ட சிறப்பின் கண்ணும். தலைவியைத் தலைவன்பாற் பாதுகாப்புக் கூறிக்கொடுக்கும் நட்பின் பகுதியிலும், தலைவியின்பாற் பேரன்புடைய தலைவனைக் குறித்து(த் தன் மனத்தகத்தே நன்றாற். றலாகிய) செம்மையும் (அவன் தலைவியை விரைவில் மணந்து கொள்ளாமை குறித்துப் புறத்தே) கடுமையும் வாய்ந்த சொற்களால் இய்ற்பழித்த்வழித் தலைவியின் நெஞ்சம் சிதைவுற்று வருந்திய நிலையிலும், என்பும் உருகுமாறு தலைவனது பிரிவினால் வருந்தும் தலைவியின் பாற்சென்று தான் கூறுவதனை அவளது உள்ளம் ஏற்றுக் கொள்ளும்படி செலுத்தித் தலைவனது அன்பு தலைமிகளிடத்ததாக வற்புறுத்துமிடத்தும், தலைவன் வரும் வழியினது தீமையைத் தாங்கள் அறிதலுற்றமையால் நேர்ந்த கலக்கத்தின் கண்னும், தலைமகள்ை இற்செறித்துக் காத்தலின்கடுமை எல்லைகடந்தமையாலும், ப்கற்குறி இரவுக்குறி என்னும் இடமும் பகலும் இரவுமாகிய பொழுதும் ஆகத்தகங்கள் வரைந்து கூறும் நிலைமையை விலக்கி, தலைவன் தலைவியிருவரிடையே யமைந்த காதல் மிகுதியுட்படத் தலைமகனுக்குரிய நாடு, ஊர், மனை, குடியுயர்வு, பிறந்தயாண்டு, பெற்றுள்ள சிறப்பு என்பன பிறரின் ஒவ்வாது மேம்பட்டனவாதல் நோக்கித் தலைவனைக் குறித்துத் தோன்றிய கூற்றுக்களோடு கூட்டி அத்தன்மைத்தாகிய நிலைமையின்கூறுபாட்டினாலேமணஞ்செய்தலை வேண்டியும், தலைவனொருவனோடு தலைவிக்குக் கூட்டம் நேர்ந்திருக்குமோ என ஐயுறுதற்குக் காரணமாகிய நிகழ்ச்சியைக்